பிறப்பிலேயே விரல்களை இழந்த சிறுவன், புலமை பரிசில் பரீட்சையில் சாதனை
பிறப்பிலேயே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த போதிலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ஐந்தாமாண்டு புலமைபரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளை பெற்று சமோதிய தினெத் ரத்நாயக்க என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார்.
குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.
உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது, ஆடை அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார்.
ஒருபோதும் தனது குறை குறித்து வருத்தமடையாத சமோதிய கல்வி கற்பதிலும் சிறந்த நிலையில் காணப்படுகின்றார்.
மன தைரியத்துடன் வாழும் சமோதிய 181 புள்ளிகளை பெற்று புலமை பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
குடும்ப வறுமை மற்றும் உடல் ஊனத்துடன் வாழும் இந்த மாணவன், சமூகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்பதனை மறுக்க முடியாதென பாடசாலை சமூகத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Post a Comment