Header Ads



மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின், முதலாவது பட்டமளிப்பு விழா

சமூகத்துக்கு முக்கிய பங்காற்றும் உலமாக்கள் தொழில்நுட்ப, பொறியியல் துறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி பதில் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் 17 பேரும், கணித அளவியலாளர் பிரிவில் 7 பேரும் உள்ளடங்களாக 24 பேருக்கு பட்டமளிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

இலங்கையில் அறபு மத்ரஸாக்களில் இருந்து வெளியேறுகின்ற உலமாக்கள் தகவல் தொழில்நுட்ப, கட்டிட நிர்மாண, பொறியியல் துறைகளில் நிபுணத்துவம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதன் மூலம் உலமாக்கள் சமூக அந்தஸ்த்துள்ள நல்ல தொழில்களைப் பெற்றக்கொள்ள வேண்டும். 

இதன் அடிப்படையில் எமது நீண்ட கால சிந்தனைக்கு அமைவாகவே மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கையில் ஐந்து பல்கலைக்கழக கல்லூரிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. அப்போது, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக விடயப்பரப்புக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு இந்த மட்டகளப்பு பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பித்தோம். 

இதில் தொழில்நுட்ப பாடங்களும், கட்டிட நிர்மாண, பொறியியல் துறை சார்ந்த பாடங்களும் கற்பிக்கப்டுகின்றதுடன், அரசாங்க வரையறைக்குள் அது சிறப்பான முறையில் இயங்கி வருகின்றது. 
உயர் நிலை டிப்ளோமா கற்கைநெறிகளை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியில் பயில முடியும். அதற்கு அப்பால் சென்று பட்டப்படிப்பினை தொடரும் வகையில்  மட்டக்களப்பு கெம்பஸினை நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். மட்டக்களப்பு கெம்பஸ் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். – என்றார். 


1 comment:

  1. I do not agree with this type of narrow minded regionalism or this type of politics in education. one university in the name of late Ashraff in Ampara and another in the name of Hisbullah. Regionalism is still going on in that university between people of different areas in district. When Dr Ameer Ali/Dr late Dr Hasbullah applied for the post of VC they were not elected because they were not from that area. Now, Dr Hizbullah (MP) tries to establish a university in East with Saudi support. This is nothing but tit for tat university. This is nothing but a political university. To establish a good university you need to plan it, you need to research about it, you need to design its syllabus, you need to secure its long term finance, you need to get approval of UGC, you need to get local and international recognition, you need to think about staff..
    I wonder if Dr Hazbullah has done all this research before he establishes this university ..
    We have already Eastern university ( A national university with more 40% of Muslim students why not we help them to develop it..
    This type of racial university in the name of any community in Sri Lanka is not good at all..
    Moreover, Millions of Saudi money is taken for this with the support of some politicians in Saudi and Mahinda..
    I'm not agaisnt to any one .. I'm not agaisnt developing Muslim education in all areas in Sri Lanka but we should not make it a political agenda...

    Institutes such as Falah Arabic college badly needs upgrade to make it a meaningful education institute in East, likewise, many Arabic colleges and institutes in Sri Lanka badly needs upgrades and yet, this Minister by passed all that to establish university in his name.
    we have 750 schools in Sri Lanka none of these schools come among 20 best national schools in Sri Lanka.
    We do not have enough best teachers in our schools,
    we still depend on Tamil teachers for maths and science subjects in many Muslim schools,
    we do not have enough best professors in any field in any university in Sri Lanka..
    Without all this, this honourable minister wants one more university for the Muslim community.
    I do not doubt his good intention but I doubt his hasty decision to establish university. It is like trying to build a castle without a solid foundation..
    Muslim education in Sri Lanka is in a mess. to upgrade it we need minds of Naleemiah Hajji.
    How many thousand Muslim students benefited from his tuition centres through his ( Renaissance movement)..
    First we should focus in establishing good schools and producing good teachers.. that is what Tamil community did in Jaffna.. How many good schools we see in Jaffna? how many good teachers we see in Jaffna for any subject?..
    we have good motivation, good intentions,but we do not have good education policy makers...
    People like Dr Ameer Ali would have been the best person for Dr Hisbullah to seek advice before he venturing to establish a university of this kind?
    We could see next university in Mannar in the name of Richard Badi or somewhere in upcountry side in the name of Rauf Hakeem..
    why not 22 Muslim Mps establish universities in their names in many parts of Sri Lanka?
    whither Sri Lankan Muslim community????.......

    ReplyDelete

Powered by Blogger.