Header Ads



இனத்துவ அரசியலும், முஸ்லிம்களின் எதிர்காலமும்


-வ.ஐ.ச.ஜெயபாலன்-

யார் பதவிக்கு வந்தாலும் தமிழ், மலையக தமிழ் மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்களால் பாதிப்புகள் ஏற்படாது தாக்குப்பிடிக்க முடியும். ஆனால் குறிப்பாக மகிந்த பதவிக்கு வந்தால் கிழக்கிலங்கையின் சமநிலை பாதிப்படையக்கூடும்..
.
கிழக்குமாகாண முஸ்லிம்களின் தனிமைப்படுதல் நெருக்கடி மட்டத்துக்கு உயர்ந்து செல்கிறது. ஏனைய இனங்களோடான தனிமைப்படுதலைவிட தென்னிலங்கை முஸ்லிம்களோடு தனிமைப்படுதல் செம்மைப் படுத்தப்படாவிட்டால் ஆபத்தானதாக அமையலாம். தென்னிலங்கை முஸ்லிம்களோடு அரசியல் உறவுகளைப் பலப்படுத்துவதுபற்றி வடமாகாண முஸ்லிம்களுக்கும் கவனம் செலுத்தவேண்டும்.
.
கிழக்கில் தமிழர் முஸ்லிம்கள் உறவில் உடனடியாக பெரும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் எதுவும் காணப்படவில்லை. 
.
கிழக்கில் தமிழர்கள் ஊர் பிரதேச வட்டங்களை உடைத்துகொண்டு வடக்குத் தமிழரோடு அரசியல் ரீதியாக பிணைந்துள்ளனர். மலைய தமிழருடனான கலாச்சார உறவும் அரசியல் பரிமாணங்களைப் பெற்று வருகிறது. இந்த தேசிய இன வளற்ச்சியையும் பலத்தையும் இனித்தான் முஸ்லிம்கள் வளர்தெடுக்க வேண்டியுள்ளது.
.
முஸ்லிம்களின் தனிக்கட்சி தேசிய இன அடிப்படையில் தனித்தரப்பாக பாராளுமன்ற அரசியல் செய்வதற்க்கான சாதனமாகும். அதன்மூலம் மட்டுமே மூன்றாவது தரப்பாக மேம்படுதல் சாத்தியம். இருந்தும் அவை UNP, SLFP சின்னக்களில் தேர்தல்கேட்டும் கட்ச்சிகளாகியுள்ளமை கவலை. நான் இங்கு வலியுறுத்துவது சமூக கலாச்சார உறவுகள் விரிவடைதல் பற்றியாகும். .அகில இலங்கை முஸ்லிம்களும் பொதுப்பிரச்சினையில் ஒன்ற்றாக நிற்பது தொடர்பான பெரும்பாக அரசியல் பற்றியே நான் இங்கு வலியூத்துகிறேன். இது கிழக்கு முஸ்லிம்களின் கட்புலனாகாமல் வளர்துவரும் ஆபத்தான தனிமைப்படுதலை உடைக்க மிக மிக அவசர தேவையாக உள்ளது. 

6 comments:

  1. மகிந்த ஆட்சியை பிடித்தால், கிழக்கில் கருணா அல்லது பிள்ளையான் தான் அடுத்த முதல் அமைச்சர்

    ReplyDelete
  2. ஜெயபாலன் ஐயா அவர்களுக்கு

    முஸ்லீம்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய உங்கள் கரிசனைக்கு முஸ்லீம்கள் சார்பாக நன்றிகள்.

    ஐயா கிழக்கிலங்கை முஸ்லீம்கள் இனத்துவ அரசியல் ரீதியாக தனிமைப் படுத்தப்படுகின்றார்கள் - மகிந்த ஆட்சிக்கு வந்தால் தனிமைப்படுத்தல் இன்னும் அதிகமாக்கப்படும் என்ற கருத்து மூலம் நீங்கள் என்ன சொல்ல முற்படுகின்றீர்கள்? மகிந்தவின் ஆட்சியில் தனிமைப்படுதல் எப்படி அதிகமாகும் என்பதனை காரண காரியங்களுடன் விளக்குவீர்களா?

    தென்னிலங்கை முஸ்லீம்களும் கிழக்கிலங்கை முஸ்லீம்களும் அரசியல் உறவை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லி உள்ளீரகள். முஸ்லீம்களின் சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் அப்படி அரசியல் உறவு சாத்தியமான விடயமா என்பது ஆராயப்பட வேண்டும். நடைமுறையில் முஸ்லீமகள் அவர்கள் வாழ்கின்ற பகுதியில் உள்ள பெரும்பான்மையுடன் அரசியல் உறவில் இணைந்து செல்வதுதான் சமுதாயங்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும் என்பது மிகநீண்ட காலமாக தென்னிலங்கை முஸ்லீம்கள் கடைப்பிடித்து வருகின்ற நியதி. அவர்களுக்கு கிழக்குடன் அரசியல் உறவு என்ற இனவாத அரசியல் நஞ்சு தேவைதானா அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    வடபுல முஸ்லீம்களும் ஏனைய பகுதி முஸ்லீம்களுடன் உறவுகளை பலப்படுத்த வேண்டும் என்ற உங்களின் கருத்துக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏனெனில் அங்கிருந்த முஸ்லீம்களைத்தான் தமிழ் விடுதலைக்கு போராடியவர்கள் 24 மணித்தியால கெடுவுக்குள் வெளியேற்றி விட்டார்களே. அந்த முஸ்லீம்கள் வடக்கிற்கு திரும்ப வந்த பிறகு நிச்சயம் நாம் உறவைப் பலப்படுத்துவோம்

    ReplyDelete
  3. @ Ajan Anthony

    கருணா, பிள்ளையான் பெயர்களை சொல்லி முஸ்லீம்களை ஏதோ பயம் காட்டுவது போல் உள்ளது உங்கள் பதிவு.

    மகிந்த பிரதமர் ஆனால் நிறைய ஆட்களின் திட்டங்களும் கனவுகளும் பலிக்காமல் போய்விடும் என்ற ஆதங்கத்தில் இடப்பட்ட பதிவு என்று சொன்னால் மிகையாகாது என்று எண்ணத் தோன்றுகின்றது.
    முஸ்லீம்கள் எங்கே மகிந்தவுக்கு சப்போர்ட் பண்ணி அவர் பிரதமர் ஆகி விடுவாரோ என்ற உங்கள் கவலை போலும்.

    ReplyDelete
  4. @Bawa,
    நீங்கள் விளங்கிய அர்த்தத்தில் எனது கருத்து இல்லை.

    கருணா, பிள்ளையான், டக்ளஸ் ஆகியவர்களே மகிந்த வின் தீவிர தமிழ்விசுவாசிகள் (Mahinda’s loyal Tamil leaders), இப்போ கவுண்டு போய் கிடக்கின்றார்கள். எனவே மகிந்த ஆட்சிக்கு வந்தால், இவர்களை மீண்டும் உயர்த்தி விட, அமைச்சர், முதல் அமைச்சர் போன்ற பதவிகளை கொடுப்பார் என்பது எனது ஊகம்.

    ReplyDelete
  5. Ajan அடேய் மொக்கையா மஹிந்தவின் காலத்தில் தான் நஜீப் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டார். முதலில் கருணாவும் பிள்ளையானும் வெற்றிபெறட்டும்

    ReplyDelete
  6. Info x, ஆட்சி அதிகாரம் இல்லாமலே, பின்கதவால் வந்து, பிரதமர் பதவியை பிடித்தவருக்கு, கிழக்கு முதலமைச்சர் பதவியில் தில்லு முல்லு செய்து தனக்கு வேண்டியவரை பதவியில் அமர்த்துவது பெரிய வேலையில்லை.

    பதவியில் நஜீப் யை அமத்தியது மகிந்த இல்லை, ஆனால் பிள்ளையானை அமர்த்தியது மகிந்த தான்.

    ReplyDelete

Powered by Blogger.