இது எப்படி இருக்கு...?
ஒரே ஒரு பூமி பந்தில் கனடா என்று ஒரே ஒரு நாடு உள்ளதாம். அதில் ஒந்தாரியோ என்ற பெயரில் ஒரு மாகாணம் இருக்குதாம். அதில் மார்க்கம் என்ற ஒரு சிறு நகரமும் அதில் Ward 7 என்று ஒரு வட்டாரமும் அமைந்து உள்ளதாம்.
உந்த வட்டாரம் 7 இல் அதிகப்படியாக வாழ்வது கல், மண், புல், புடுக்கு எல்லாம் தோன்ற முன் தோன்றின என்று தன்னை தானே பெருமைப்படும் தமிழ் இனத்தை சார்ந்தவர்களாம்.
மார்க்கம் நகருக்கு உள்ளுராட்ச்சி தேர்தல் அறிவித்தவுடன் இந்த வட்டாரத்தில் அதிகப்படியாக தமிழ் மக்கள் வாழ்வதால் அவர்களில் இருந்து திறமையான ஒருவரை தெரிவு செய்து மாநகர சபைக்கு அனுப்ப 100 வீத வாய்ப்புகள் இருந்ததாம். ஆனால் அப்படி வெல்வதற்கு ஒரே ஒரு தமிழர் தான் போட்டியிட்டல் வேண்டும் என்றும் அப்படி இல்லாவிடின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாம்.
ஆனால் இதை நன்கு அறிந்தும் ஐந்து தமிழ் நண்டுகள் இந்த ஒரே ஒரு வட்டாரத்துக்காக போட்டியிட்டனவாம். விடயம் தெரிந்த பலர் பல வழிகளில் பலவாறு வேண்டுகோள் விடுத்தும் செவிமடுக்காமல் ஐந்து நண்டுகளும் ஒற்றை காலில் நின்று போட்டியிட்டனவாம். அதிலும் ஏற்கனவே மாகாண சபை தேர்தலில் வென்று உறுப்பினரான லோகன் எனும் கொழுத்த பெரிய நண்டு, தமிழக அரசியல்வாதிகள் போன்று தன் வாரிசையும் உடனடியாக அரசியலில் ஈடுபடுத்த வைக்க வேட்ப்பாளராக நிறுத்தியதாம். வாக்குகள் பிரிக்கப்பட்டு பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களில் இருந்து ஒரு திறமையானவர் கூட தெரிவு செய்யபட முடியாது என நன்கு தெரிந்தும் இந்த ஐந்து நண்டுகளும் ஒன்றையொன்று எதிர்த்து போட்டியிட்டனவாம்.
ஈற்றில் எதிர்பார்த்த மாதிரி நேற்று நடந்த தேர்தலில் இந்த ஐந்து நண்டுகளில் இருந்து ஒன்றும் தெரிவு செய்யப்படாமல் இஸ்லாம் மார்க்கத்தை சார்ந்த ஒருவர் தெரிவு செயப்பட்டாராம். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 3308 என்றும் தமிழ் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 6900 என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறனவாம்.
தானும் வெல்லவில்லை தாம் நினைத்த மாதிரி மற்ற ஒரு தமிழ் வேட்ப்பாளரும் வெல்லவில்லை என்பதை அறிந்து அந்த ஐந்து நாடுகளும் குதித்து கும்மாளம் இடுகின்றனராம்.
இந்த கதையை கேட்ட ஒரு எலி குஞ்சு சொல்லிச்சாம்: தான் வாழும் பிரதேசத்திலேயே ஒரு பிரதிநிதியை தெரிவு செய்ய ஒற்றுமையில்லாத ஒரு புலம்பெயர் இனம், தமிழகத்தில் யார் வெல்வது, இலங்கையின் வடக்கு கிழக்கில் எந்த கட்சி வெல்வது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக தன்னை இன்னும் நினைத்து கொண்டு இருக்கு ..ஐயோ பாவம் என்று.
Super expression..... all are true here. Thanks for this
ReplyDeleteமிகவும் அபத்தமான பதிவு. மார்கம் 7ம் வட்டாரத் தேர்தலில் பகிஸ்தானைச் சேர்ந்த ஹாலிட் உஸ்மான் 3308 (24.14%) வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். கீர்திகா லோகன் கணபதி 2635 (19.23%) வாக்குகளைப் பெற்று ஆக 573 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். கீர்திகாவுக்கு அடுத்த 3 இடத்தில் ஹுங் சண்டே 2079 வாக்குகளை பெற்றார். நான்காவது இடத்தை 1961 வாக்குகளைப் பெற்று செழியன் என்கிற தமிழரும் ஐந்தாவது இடத்தை 1587 வாக்குகளைப் பெற்று வரதராஜ மலர் என்கிற தமிழரும் ஏழாவது எட்டாது இடங்களை செல்லாசோதி இலகுப்பிள்ளை என்பவர்கள் முறையே 350,236 வாக்குகளைபெற்று பிடித்தனர். ஆரம்பத்தில் இருந்தே முன்னணி தமிழ் வேட்பாளருக்கு ஏனையவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தி வந்தேன். கருத்துக் கணிப்புகளில் கீத்திகா இரண்டாவது இடத்தை பிடித்தபோது அதனை சுட்டிக்காட்டி ஏனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறக்கூடிய ஒரே வேட்பாளரான கீர்திகாவுக்கு வாக்களிக்குமாறு அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டேன். தேர்தலில் எத்தனை தமிழரும் போட்டியிடலாம் ஆனால் இறுதியில் முன்னணியில் இருக்கும் தமிழருக்கு ஏனையவர்கள் விட்டுகொடுக்கவேண்டும் என வலியுறுதினேன். இதனடிப்படையில் வெல்லக்கூடிய நிலையில் இருந்த ஒரே தமிழ் வேட்பாளரான கீத்திகா லோகனுக்கு விட்டுகொடுக்குமாறு வற்புறுத்தினேன்.
ReplyDeleteமழைக்காலத்தில் முளைக்கும் காளான்கள் போல் தோன்றியுள்ள சிறிலங்கா முஸ்லீம்கள் கட்சிகள் இதில் பாடம் படிப்பார்களா?
ReplyDeleteநமக்குள் பிரிவுகள் அதிகரிக்கும் போது வாக்குகள் பிரிந்து நம் பிரதிநிதித்துவத்தை இழக்கின்றோம் என்ற உண்மை புரிந்தால் சரி
கனடாவின் ஒரு பகுதியை இந்த செய்தி தாங்கி வந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் கட்சிகளும்,குறிப்பாக முஸ்லிம்களும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். Mr Bawa கூறியது போல்
ReplyDeleteweather someone live in sri lanka or canada cant change the habits born with them. right ?
ReplyDelete