இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி, பொன் அருணாச்சலம் எழுதிய அறிக்கை
சேர் பொன் அருணாச்சலம் இவர் 1853 செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். தகப்பனார் பெயர் கேட் முதலியார் யு. பொன்னம்பலம் இவருடைய சகோதரர் சேர் பொன் இராமநாதனாவார். இவர் இலங்கை குடியேற்ற நாட்டு செயலாளராக ஒருமுறை இருந்தவரும் 1901 இல் குடிசன மதிப்பீட்டுக்கு பொறுப்பாக இருந்தவரும் பதிவாளர் நாயகமாகவும் 1927ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸை ஆரம்பித்தவரும் இலங்கையின் தேசிய வீரர்களில் ஒருவரான சேர் பொன் அருணாசலம் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பாக பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.
பெரிய பிரித்தானியாவினதும் அயர்லாந்தினதும் அரச ஆசிய கழக நிலைய அறிக்கை தொகுதி 1 பக்கம் 537, 1827ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி வாசிக்கப்பட்ட அறிக்கை வருமாறு:
பன்னெடுங்காலத்துக்கு முன்னரே இலங்கையில் அரபிகள் இருந்தார்கள். முகம்மது நபி அவர்கள் பிறப்பதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர்கள் இங்கு வர்த்தகர்களாக வந்தனர். அவர்களது தொழிலில் எவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள் என்றால், இந்திய சாகரத்தில் வர்த்தகத்தை நடத்திக் கொண்ட அதேசமயம் அப்பிரதேசத்தில் நடந்த மரணத்தை விளைவிக்கும் கடற்சண்டையிலும் மார்க் அந்தோனியின் கப்பல்களுக்கு படைகளை கொடுத்துதவிக் கொண்டும் இருந்தனர்.
10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்றாண்டு வரை அரபிகள் வர்த்தகத்தில் கிழக்கே இணையற்ற எஜமானர்களாக விளங்கினர். ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தி செய்த எல்லா நாடுகளிலும் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். அவர்களுடைய கப்பல்கள் சோபாலாவிலிருந்து பாப் அல் மந்திப் வரையிலும் ஏடனிலிருந்து சுமாத்திரா வரையும் எல்லா துறைமுகங்களுக்கும் சென்றன. இலங்கை கரையோரங்களில் வதியும் இந்த முஅர்ஸ் சுறுசுறுப்பான துணிச்சல் மிகுந்த வீரர்களின் வழித்தோன்றலாவர். அவர்கள் கலப்பற்ற அறபிகள் இல்லாவிட்டாலும் முகம்மது நபி அவர்களின் மதத்தை பின்பற்றும் கலப்பு மணம் செய்துகொண்ட அரபு மூதாதையரின் வழித்தோன்றலாகும். மரக்கல மினிஸ்ஸு அல்லது கடலோடிகள் என்றும் சிங்கள புனைபெயர் அவர்களின் ஆரம்பத்தையும் தொழிலையும் விளக்குகிறது.
எந்தக் காலத்திலும் பொருட்களை உற்பத்தி செய்பவர்களாக அல்லாது வர்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்வதிலேயே கரிசனையாக இருந்தனர். அவர்கள் ஆபரண வணிகராகவும் மாணிக்கக் கல் விற்பன்னராகவும் முத்துக்களை சேகரிப்பவராகவும் இருந்தனர். துறைமுகங்களில் பண்டகசாலைகளை கட்டி கப்பல்களால் துறைமுகங்களை நிரப்பி செல்வத்தையும் இன்பப்பொருட்களையும் மாணிக்கக்கற்கள், சாயம் தரும் மரங்கள், வாசனைத் திரவியங்கள் யானைத் தந்தங்கள் என்பவற்றை சீனாவுக்கும் பாரசீக குடாவிற்கும் அனுப்பி வைத்தனர்.
1901ஆம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் 3ஆம் அத்தியாயம் 27ஆம் பந்தியில் 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கை தீவின் வர்த்தகம் அவர்களின் கைக்கு மாறியது என்றும் யானை, மாணிக்கம், வாசனைத்திரவியம், முத்து போன்றவற்றை யூப்ரடிஸ் நதிக்கு அப்பால் கொண்டு செல்பவர்களாகவும் சீனர்களுடன் பண்டமாற்று செய்வோராகவும் இருந்தனர். எனவும் அதே அத்தியாயம் 31 ஆம் பந்தியில் ஸ்பையினை ஆண்ட அதே முஅர்ஸ் என அழைக்கப்பட்ட வியாபார நுணுக்கம் தெரிந்த அதே பெயரைக் கொண்ட அவர்களின் வழித்தோன்றல்களே இலங்கைச் சோனகர்களாகும் எனவும்,
மேலும் 10 ஆம் அத்தியாயம் 34 ஆம் பந்தியில் 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை அறபிகளே கீழைத்தேய கடல்களினதும், வர்த்தகத்தினதும் எஜமானர்கள். போர்த்துக்கேயரிடம் அகப்படும் வரை இலங்கையில் மிகுந்த செல்வாக்கை செலுத்தினர். இக்காலப்பகுதியில் இலங்கையினதும் இந்தியாவினதும் கரையோரங்களில் குடியேறினர். அங்கு வசித்த தமிழர்களை கலப்புத் திருமணம் செய்தனர் எனவும்,
மேலும் 10ஆம் அத்தியாயம் 35ஆம் பந்தியில் அவர் சோனகர்கள் எந்த வகையிலும் புத்திக் கூர்மை குறைந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் மேல் நாட்டுக்கல்வியில் அக்கறை காட்டவில்லை. அராபி பாஷா இலங்கை வந்தபோதும் துருக்கியரின் உடையை அணிந்தனரே ஒழிய கல்வியில் நாட்டம் செலுத்தவில்லை. மத்திய காலத்தில் ஐரோப்பாவினதும், ஆசியாவினதும் பெரும்பாலான பகுதியில் இருள் கவ்விக் கொண்டு இருந்த போது கல்வியிலும் நாகரிகத்திலும் ஒளி விளக்கு மங்காது மேலோங்கி இருந்தனர்.
மேலும் தேசாதிபதி அவர்கள் கலந்து கொண்ட சட்டசபை கூட்டம் ஒன்றில் இலங்கையின் அறபி வழி சோனகர்கள் புத்திக் கூர்மை வாய்ந்த ஒரு கூட்டத்தினர் எனவும் பேசினார்.
(இலங்கைச் சோனகர் இன வரலாறு ஒரு திறனாய்வு, பக்கம் 17,18,19,20,21 ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்)
வி.எம். மொஹமட் லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்வி அலுவலகம், மூதூர்.
Good work br. Lafir! carry on, May Allah Blessing you!
ReplyDeleteபடிப்புக்கு ஏற்ற அறிவு. அறிவுக்கு ஏற்ற படைப்பு. படைப்புக்கு ஏற்ற சொல் மற்றும் வசனநடை. வசனநடைக்கேற்ற ஆக்கம்.
ReplyDeleteமுதல் மனிதனும் முஸ்லிமுமான ஆதம் (அலை) காலம் முதலே இந்நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதனை, ஆய்வு பூர்வமாக நிரூபித்துச் சென்று கொண்டிருக்கும் வரலாற்றுப் பாதையின் இன்னொரு சிலிர்க்க வைக்கும் மைல்கல்தான் அறிவியலாளர் முஹம்மது லாபீர் அவர்களது இந்த வரலாற்றுத் தொகுப்பு.
ReplyDeleteபேருவளை நகரில்தான் உலகின் முதலாவது வர்த்தக முதலீட்டு வலயம் இருந்தது என்ற சம்பிக்கவின் வாதமும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று இங்குள்ள சீனங்கோட்டையின் சர்வதேச மாணிக்கக்கல் வர்த்தக மத்திய நிலையம், இன்றைய உலக ஜாம்பவானான சீன வர்த்தகர்களாலேயே புதன், சனி தினங்களில் களை கட்டிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.
அச்சர்வதேச வர்த்தக மத்திய நிலையம் முஸ்லிம்களின் ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் உள்ளது நம்மவர்களின் வாதங்களுக்கு மென்மேலும் வலுவூட்டுகின்றது.