அலரி மாளிகையை விட்டு, ரணில் வெளியேற மாட்டார் - முஜிபுர் ரஹ்மான்
"நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுள்ள ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிருந்து நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை மிக மோசமான ஜனநாயக மீறல். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுறுமாறும் வலியுறுத்தி, ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் (செவ்வாய்), கொழும்பில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," அந்தக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இதேவேளை, மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு ரணில் விக்ரமசிங்க உடன்பட்டுள்ளார் என, உள்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி குறித்து வினவியபோது, "அது பொய்யான தகவல். நான் தற்போது அலரி மாளிகையிலேயே இருக்கின்றேன். நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என அறிய வரும் வரையில், அலரி மாளிகையை விட்டு ரணில் விக்ரமசிங்க வெளியேற மாட்டார்" என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
Post a Comment