வடக்கும்கிழக்கு மாகாண சபைகளை, தீர்மானிக்கின்ற கட்சியாக மக்கள் காங்கிரஸ் செயற்படும் - அப்துல்லாஹ் மஃரூப்
எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கின்றவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை - கிண்ணியா, அஹமட் லேன் உள் ஒழுங்கையில் 45 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் வீதி, வடிகான் அமைப்புக்கான வேலைத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் இலங்கை துறை தர்காமுனை என்ற பகுதியை கடந்த உள்ளூராட்சி மன்ற காலங்களில் வெற்றி பெற்று வந்த TNA கட்சியை தோற்கடித்து ஸ்ரீகாந் என்ற ஐயரை எங்கள் உறுப்பினராக தெரிவு செய்திருக்கின்றோம்.
அதேபோன்று எமது கட்சியினுடைய தலைவர் 37 தமிழ் உறுப்பினர்களையும், கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருந்து வந்த நான்கு உள்ளூராட்சி மன்ற பிரதேசங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றோம்.
எங்களுடைய கட்சியின் பெயர் அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் அது முஸ்லிம் கங்கிரஸோ, தமிழ் கங்கிரஸோ, சிங்கள காங்ரஸோ அல்ல. சகல சமூகத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைமைத்துவ செயற்பாட்டையும் கொண்டிருக்கின்றோம்.
விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் , மாவை சேனாதிராஜாவுக்கும் ஏற்பட்டிருக்கின்ற நிலைமை வடபுலத்தில் கூட மாகாண சபையை தீர்மானிக்கின்ற ஒரு தலைமையாகவும் கட்சியாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்படப்போகின்றது.
வடக்கும் கிழக்கும் மாகாண சபைகளை இம்முறை தீர்மானிக்கின்ற கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயற்பட இருக்கின்றது.
இதற்கு இளைஞர்களின் பங்களிப்பை முழுமையாக எதிர்பார்கின்றோம். இந்த தேர்தலில் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் நாங்கள் செய்த உறுதிமொழியை செய்திருக்கின்றோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பகல் கனவு வேண்டாம். இலங்கையில் மிகவும் பின் தங்கிய பிரதேச சபைகளான மன்னார் மாந்தை மேற்கு முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மன்னார் பிரதேச சபை ஆகியவை அபிவிருத்தியை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தார்கள். நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்ததால் உங்களுக்கு அளித்த வாகாக என்ன வேண்டாம். மேற் குறிப்பிட பிரதேச சபை மூன்றும் இளங்கியிலேயே பொருளாதாரத்தில். மிகவும் பிண தங்கிய யுத்தத்தால் கடுமையாக பாதிக்க பட்ட மக்கள் நீண்டகால உரிமையை விடுத்து குறுகிய கால உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய சில கோரிக்கைகளுடன் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்தார்கள். நான்காவது சபை மன்னர் மாவட்ட முசலி பிரதேச சபை. இங்கே முழுக்க சட்டவிரோதமாக குடியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தான் அதிகம். இது தான் உங்களின் தட்காலிக வெற்றியின் ரகசியம்.
ReplyDelete