ஜனாதிபதிக்கு சர்வதேசத்தினால், முக்கிய எச்சரிக்கை
இலங்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டத்திற்கு எதிராக செயற்பட கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேச தடை விதிக்கப்படும் என சர்வதேச நாடுகள் எச்சரித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதி, புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக விசேட வெளிநாட்டு பயணத்தடையை முதற்கட்டமாக விதிக்கப்படவுள்ளதாக சர்வதேச பிரஜைகளுக்கு அறிவிக்கப்படும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராஜதந்திரிகள் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துப் பேசியிருந்தனர். இதன்போது அரசியலமைப்பு எதிராக செயற்படுகின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தனர்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், சீனாவை தவிர எந்தவொரு பெரிய நாட்டுத் அரச தலைவர்களும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment