Header Ads



பெற்றோருக்கு ஜனாதிபதியின், மிகமுக்கிய அறிவுரை

ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறு அனைத்து அரச பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும், சித்தியடையாவிட்டாலும் தொந்தரவுகளின்றி பிள்ளைகளை அரவணைப்பது எவ்வாறு என்பது பற்றி பெற்றோர்களுக்கு இதன்போது ஆலோசனை வழங்குவது அவசியமாகும் எனவும் ஜனாதிபதி அரச பாடசாலை அதிபர்களைக் கேட்டுக் கொண்டார்.

கண்டியில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு  உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்றனர். இதன் காரணத்தினால் நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

No comments

Powered by Blogger.