மகிந்தவுக்காக பிச்சை கேட்கும் மைத்திரி - ராதாகிருஸ்ணனை வளைத்துப்போட முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மலையக மக்கள் முன்னணியின் ஆதரவை கோரியுள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போதே இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளையில் இன்று இடம்பெற்ற கல்வி நிகழ்வு ஒன்றுக்கு ஜனாதிபதியே பிரதம அதிதியாக பங்கேற்கவிருந்தார்.
எனினும் அவர் நடைமுறை அரசியல் பிரச்சினைக்காரணமாக பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் நிகழ்வு முடிந்த பின்னர் அது தொடர்பில் கேட்டறியும் முகமாக கல்வி ராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஸ்ணனை ஜனாதிபதி அழைத்திருந்தார்.
இதனை ஏற்று அவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமாரும் ஜனாதிபதியை சந்தித்தனர்.
இதன்போது மஹிந்தவின் புதிய ஆட்சிக்கு ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
எனினும் தமது கட்சி ரீதியிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ரீதியிலும் தீர்மானத்தை மேற்கொண்டு அறிவிப்பதாக தாமும் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணனும் ஜனாதிபதி தெரிவித்துவிட்டு வந்ததாக அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment