Header Ads



ஒரே நாற்காலியில் அமர்ந்து மைத்திரிபால, எப்படி மகிந்தவுடன் பேசுவார்...?

நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் கவிழ்ந்து விடவில்லை என்பதால், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியாது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் ஆட்சிக்கு வர வேண்டுமானால், தற்போதைய அரசாங்கம் கவிழ வேண்டும். அரசாங்கம் கவிழவில்லை சிறப்பாக முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ற வகையில், கடந்த அரசாங்கத்தில் திருடர்கள், கொள்ளையர்கள், மோசடியாளர்கள், கொலைகாரர்கள், ஹெரோயின் விற்பனையாளர்கள், எத்தனோல் விற்பனையாளர்கள் இருப்பதாக கூறியே அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிரணியில் இணைந்தார்.

இப்படியான நிலைமை, இடைக்கால அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரே நாற்காலியில் அமர்ந்து எப்படி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவார்?.

அப்படியான திருடர்களுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியாது. அப்படி நடந்தால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர் நீங்கள் கூறியது உண்மையா அல்லது தற்போது கூறுவது உண்மையா என மக்கள் ஜனாதிபதியிடம் கேள்வி கேட்பார்கள் எனவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Correct your comment Mr. Ranjam Ramanayake. They sat in two different chairs. May be in a round table.

    ReplyDelete
  2. He has gone and met Mahinda for what purpose. Even he has told some time ago that he will disclose Mahinda's secret if he forms a party. Where is the secret?

    ReplyDelete

Powered by Blogger.