பௌத்தர்களை மதம் மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு, ஜப்னா முஸ்லிம் இணைய செய்தியும் முறைப்பாட்டில் இணைப்பு
கௌதம புத்தர் ஒரு முஸ்லிம் இறைத்தூதர் என்ற உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீதின் கருத்துக்காக இன்று -22- அவர் கொழும்பு மிஹிந்து மாவத்தையில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டார்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டது. ஜப்னா முஸ்லிம், மடவளை நியூஸ் ஆகிய இணையத்தளங்களில் வெளிவந்த அறிக்கைகளின் பிரதியுடன் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டே விசாரணை செய்யப்பட்டது.
இதன் போது தனது கருத்துக்களுக்கான ஆதாரங்கள் கேட்கப்பட்ட போது அல்குர் ஆன் சிங்கள மொழிபெயர்ப்பில் இருந்து மௌலவியால் நேரடியாக எடுத்துக்காட்டப்பட்டது. அதனை பொலிசார் பிரதி எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இவ்வாறு புத்தர் ஒரு முஸ்லிம் என கூறுவதன் மூலம் பௌத்த மக்களை மதம் மாற்ற முயற்சி எடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குரிய பதில் என்ன எனவும் வினவப்பட்டது. அதன் போது புத்தரும் ஏனைய நபிமார் போன்று அவரும் முஸ்லிம் நபி என தான் சொல்வதன் மூலம் எல்லோரும் ஒன்று என்பதையே கூற வருவதால் அனைவரும் ஒரே கொள்கை எனும் போது மதமாற்றம் என்பதே இங்கு இல்லை என முபாறக் மௌலவியால் விளக்கப்பட்டதை பொலிசார் ஏற்றுக்கொண்டனர்.
மேற்படி விசாரணை மிகவும் சிநேகபூர்வமாகவும் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் மிக கௌரவத்துடன் தன்னை நடத்தியதாகவும் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
May Allah be with Brother Mubarak..
ReplyDeleteAllah yar moolam yarukku hidayath walanguwan enbathai yarum ariya mattarhal
ReplyDeleteகௌதம புத்தர் ஒரு இறைத்தூதர் என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் எல்லா இறைத்தூதர்களும் அல்லாஹ்ப் பற்றிக் கூறினார்கள். ஆனால் கௌதம புத்தர் அல்லாஹ்ப் பற்றிக் கூறவில்லை. பித்தபெருமான் முன்னறிவிப்புச் செய்த மைத்ரீ ஹாமிதரு பற்றிய விபரங்களை விளக்கி மைத்ரீ ஹாமிதரு என்பவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தான் என்பதை புரிய வைக்கலாம். அது ஹிதாயத்திற்குக் காரணமாகவும் அமையலாம்.
ReplyDelete