கட்டாரின் புதிய சட்டத்துக்கு, குவிகிறது பாராட்டு
கட்டாரின் புரட்சிகரமான அரசியல் புகலிடமளிக்கும் சட்டம் சாதகமான முன்னெடுப்பாகும் என முன்னணி மனித உரிமைகள் அமைப்பொன்று பாராட்டுத் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் ,
செப்டம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட இச் சட்டம் பிராந்தியத்திற்கு முன்னுதாரணமாகும். எனினும் சுதந்திர நடமாட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ரீதியாக அகதிகளுக்கு கதவுகளைத் திறக்காத செல்வந்த நாடுகளைக் கொண்டமைந்த பிராந்தியத்தில், கட்டாரின் புகலிடச் சட்டம் பெரியதொரு முற்போக்கான செயற்பாடாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கு பெண் பிரதிப் பணிப்பாளர் லாமா பகீஹ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சட்டத்தின் கடப்பாடுகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டார் புகலிடச் சட்டம் வளைகுடாவில் வசிப்பதற்கான சட்டங்களின் ஒரு தொகுதியாகும். கடந்த செப்டம்பர் மாதம் நான்காம் திகதி கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல்தானியினால் அங்கீகரிக்கப்பட்டது.
Post a Comment