Header Ads



அமெரிக்காவின் ஆதரவின்றி, ஜமாலை கொன்றிருக்க முடியாது - ஈரான்

சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59).  

இந்த நிலையில் கடந்த 2–ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்துக்கு சென்றபோது கசோகி கொல்லப்பட்டார். 

இந்த நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தொலைக்காட்சி ஒன்றில் இன்று -24- பேசும்பொழுது, அமெரிக்கா நாட்டின் ஆதரவின்றி இதுபோன்ற செயலை துணிவுடன் எந்த நாடும் செய்திருக்கும் என நான் நினைக்கவில்லை என கூறினார்.

சவூதி அரேபியாவை ஆளும் பழங்குடி குழுவானது பாதுகாப்பு எல்லையை கொண்டது.  இந்த பாதுகாப்பு எல்லையானது அமெரிக்க ஆதரவை சார்ந்தது.  அமெரிக்காவே அவர்களுக்கு ஆதரவு தரும் சூப்பர் பவராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சன்னி பிரிவு முஸ்லிம்களை கொண்ட அரேபிய அரசும், ஷியா பிரிவு கொண்ட ஈரான் நாடும் நீண்ட காலம் ஆக போராடி வருகிறது.


2 comments:

  1. ஈரானிய அதிபர் ஹஸன் ரூஹானியின் கருத்து சமகால அரசியலில் அவரின் அறிவின் தரத்தைக் காட்டுகின்றது. சமகால அரசியல் இராஜதந்திர கட்டமைப்பில் உலக நாடுகள் கட்டாயம் பின்பற்றவேண்டிய ஜனீவா ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் நாட்டின் நிலைப்பாட்டையும் அவருடைய கருத்து மேலோட்டாக தொட்டுக்காட்டுகின்றது. இந்தவகையில் ஈரான் போன்றதொரு நாடு இத்தகைய கருத்தைத் தெரிவிக்கும் என நாம் எதிர்பார்த்ததில்லை.

    ReplyDelete
  2. கொலை அனுபவம் பேசுது, கொலையைப் பற்றி கொலைகாரனுக்கு நன்றாகத் தெரியும்,

    ReplyDelete

Powered by Blogger.