"முஸ்லிம் உலகம் பற்றி, ஆங்கில பத்திரிகைகள் எழுதுவதை ஏற்பவன் மகாமுட்டாள்"
துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்துள் கொல்லப்பட்ட ஜமால் பற்றிய செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது நன்றாக தெரிந்தும் அவற்றை சரியாக நெறிப்படுத்தாது நமது நாட்டு ஊடகங்கள் கட்டுரை வெளியிடுவது பாரிய ஊடக அத்துமீறலாகும்.
அண்மையில் ஒரு தேசிய பத்திரிகையில் வெளியான ஜமால் கொலையுண்ட பின்னர் நடந்த கொடூரம் எனும் கட்டுரையில் சவூதி அரேபியாவுக்கு திரும்பிப்போகவிடாமல் கழுத்து நெறித்து ஜமால் கொல்லப்பட்டார் என ரொய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஜமாலுக்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாத நிலையில் அவரது உடல் கிடைக்காத நிலையில் அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டார் என்று எப்படி சொல்லமுடியும்?
அத்துடன் சவூதி அரசுக்கு எதிரான ஒருவர் சவூதியிலிருந்து வெளியேறினால் சவூதிக்கு ஆபத்து என்பதால் உள்நாட்டில் வைத்து கொல்லப்பட்டால் அது நியாயம். ஆனால் சவூதிக்கெதிரான ஒருவர் அவர் சவூதிக்கு வரப்போவதாக கூறியதும் அவரை நாட்டுக்கு வரவைத்து ஏதாவதொரு குற்றச்சாட்டை வைத்து கொல்ல முடியும் அல்லது வாகனத்தால் இடித்தும் கொல்ல முடியும்.
அல்லது சவூதிக்கு வரமாட்டேன் என ஜமால் அடம்பிடித்திருந்தால் அவரை துருக்கியில் வைத்துக்கொன்றார்கள் என்றால் அதில் ஓரளவு நியாயம் உண்டு.
ஆனால் சவூதிக்கு போக விரும்பிய ஜமாலை சவூதியில் இருந்து துருக்கிக்கு சென்று கொன்றதாக சொல்வது பாரிய முரண்பாடு.
"அதன் பின் அவரின் உடல் ஒரு கம்பளியில் சுற்றப்பட்டு கொலையில் தொடர்புடைய உள்ளூர் நபரிடம் கொடுக்கப்பட்டது. சவூதியை சேர்ந்த அந்த நபர் ஜமாலின் உடைகளை உடுத்திக்கொண்டு தூதரகத்தில் இருந்து வெளியேறினார்" என அக்கட்டுரை சொல்கிறது.
ஜமாலை கொன்று பெட்டியில் எடுத்துக்கொண்டு துருக்கிக்குள்ளேயே நுழைந்த அந்த நபரை ஏன் துருக்கி அரசு ஜமாலின் உடல் உள்ள பெட்டியுடன் கைது செய்யவில்லை. ஒரு மனிதரை துண்டாக அரிந்து பெட்டியில் வைத்தால் அவர் கொழுத்த மனிதர் என்பதால் சுமார் 80 கிலோ மனிதரை பெட்டியில் வைத்து தனியொரு மனிதனால் தூக்கி செல்ல முடியுமா? இழுவைப்பெட்டி என்றாலும் அது மிகவும் பெரிய பெட்டி என்பதால் நிச்சயம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருக்கும். காரணம் ஜமால் தூதரகத்துள் சென்று காணாமல் போன சில மணி நேரங்களுக்குள் அவரின் காதலி பொலிசுக்கு அறிவித்துள்ளாள்.
அத்துடன் உடல் கிடைக்காத நிலையில் அவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டார் என்றால் எப்படி இந்த விடயம் மற்றவர்களுக்கு தெரியும்?
கடைசியாக வந்த செய்தியின் படி ஜமால் கஷோகியின் உடல் பாகங்கள் சவூதி தூதுவரின் கிணற்றில் இருந்து கிடைக்கப்பெற்றதாக சொல்லப்படுகிறது. அப்படியாயின் ஏற்கனவே அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு காட்டில் வீசப்பட்டது என்பது பொய்யா அல்லது இப்போது சொல்லப்படுவது பொய்யா?
உடலின் பாகம் இப்போதுதான் கிடைத்தது என்றால் அவரது விரலை வெட்டிய கதை பச்சை பொய் என்பது தெளிவாகிறது.
இன்னுமின்னும் பல பொய்களை இஸ்லாம் விரோத ஊடகங்கள் தெரிவிக்கும்.
இன்னுமின்னும் பல பொய்கள் வரலாம் என்பதை உறுதியாக கூற முடியும்.
உலக நாடுகள் அனைத்திலும் ஒரேவிதமான அரசியல் சாசனம் இல்லை. அமெரிக்க சாசனம் போன்று ரஷ்யாவின் சாசனம் இல்லை. அதே போல் இந்தியாவின் அரசியல் சாசனம் வேறு, இலங்கை, பாகிஸ்தானினதும் வேறு. அதே போல் சவூதி அரேபியாவின் அரசியல் சாசனம் வேறு.
அனைத்து நாடுகளுமே ஜனநாயகம், ஊடக சுதந்திரம் என சொல்லிக்கொண்டாலும் தமக்கொரு ஊடக முறை அடுத்தவனுக்கொரு ஊடக முறை என்றே நடை முறைப்படுத்துகின்றன.
அமெரிக்கா சத்தாமை கொல்வதற்கு பயன் படுத்தியது ஊடகவியலாளர்களைத்தான். இராக்கில் இரசாயண ஆயுதம் உள்ளதாக ஊடகங்களை சொல்ல வைத்தது. அது போன்றே ஐ எஸ் என்பது சாதாரண இயக்கமாக இருந்த போதும் ஐரோப்பிய, அரபு ஊடகங்கள் அதனை பெரிதாக அளவுக்கு மீறி விஷ்வரூபமாக காட்டின. பின்னர் சில வார சண்டையில் அவர்கள் ஒழிந்த போதுதான் தெரிந்தது அவர்கள் பற்றி ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்துள்ளன என்று.
அதே போல் அமெரிக்கா,ஐரோப்பாவுக்கு பிடிக்காத நாடுகளாயின் அவற்றின் ஆட்சியாளர்களுக்கெதிராக ஊடகங்களை பயன்படுத்தி ஊதிப்பெருப்பிப்பதை கண்டு வருகிறோம். இடி அமின் பற்றி பல பொய்களை இட்டுக்கட்டினார்கள். சத்தாம், கடாபி போன்றவர்களுக்கெதிராக ஊடக யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். இப்போது சவூதிக்கெதிராக இதே ஊடக யுத்தத்தை கட்டவிழ்க்கின்றனர்.
ஊடகவியலாளர் கொல்லப்பட்டதை நாம் நியாயம் என கூறவில்லை. ஆனால் கைகலப்பில் அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை சவூதி ஏற்றுக்கொண்டு அதில் ஈடுபட்டோரை கைது செய்தும் இருப்பதை பாராட்டாமல் இக்கொலையை சவூதி அரசு திட்டமிட்டு செய்தது என்பதையும் அக்கொலை பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகளையும் நாம் மறுக்கின்றோம்.
அதேவேளை நாம் இவற்றை எழுதும்போது ஏதோ சவூதியிடம் இருந்து பெற்று எழுதுகிறோம் என சிலர் நினைக்கலாம்.
ஊடகவியலாளர் கொலையை வைத்து இலங்கையின் பல ஊடகங்களும் நபர்களும் சவூதி அரசை இலக்கு வைத்து மோசமாக தாக்கும் நிலையில் சவூதியிடமிருந்து தூதுவராலயம் மூலம் நிதி உதவிகள் பெறுவோர் கூட சவூதிக்கு ஆதரவாக எதையும் எழுதுவதை காணவில்லை.
அ.இ. ஜம்மிய்யத்துல் உலமா உட்பட பல இயக்கங்கள் சவூதியின் உதவிகளை பெற்று வருகின்றன. அவை எதுவும் இது விடயத்தில் வெளிவரும் பொய்ச்செய்திகளை கண்டித்ததை காணவில்லை.
சவூதியின் தேசிய தின கொண்டாட்டம் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தால் அங்கு சென்று வயிறு முட்ட திண்டு வருவோர் கூட மௌனமாக இருக்கின்றனர்.
ஆனால் சவூதி தூதுவராலயத்துடன் கொஞ்சமும் தொடர்பு இல்லாத, சவூதியிடமிருந்து ஒரு சதமும் நிதியுதவி பெறாத உலமா கட்சியும் அதன் தலைவருமே சவூதி அரசுக்கு ஆதரவாக எழுதி வருகின்றனர்.
உலமா கட்சிக்கும் கொழும்பில் உள்ள சவூதி தூதுவராலயத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனும் போது பலருக்கும் ஆச்சர்யம் வரலாம். கடந்த பல வருடங்களுள் சவூதி தூதுவராலயதின் விசேட நிகழ்வுகளில் உலமா கட்சி கலந்து கொள்ளவுமில்லை அதற்கான அழைப்பை தூதுவராலயம் அனுப்பவும் இல்லை என்பதன் மூலம் இதனை உறுதிப்படுத்தலாம்.
சவூதி மூலம் இலவச ஹஜ், உம்ரா பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் கூட வாய் பொத்தி மௌனமாக உள்ளனர்.
பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு தூதரகங்களாக இருப்பின் உடனடியாக சில ஊடகவியலாளர்களை பணம் கொடுத்து தமது நாட்டுக்கு ஆதரவாக எழுத வைப்பர். இதனைக்கூட சவூதி தூதுவராலயம் செய்வதில்லை. காரணம் இது போன்ற விடயங்களில் சவூதியோ தூதுவராலயமோ இறைவன் பொய்யர்களுக்கு தண்டனை கொடுப்பான் என சும்மா இருந்து விடுவதையே காண்கிறோம்.
ஆனாலும் நம்மால் உண்மையை எழுதாமல் இருக்க முடியாது. இறைவன் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்காகவாவது உண்மையை எழுத வேண்டும் என்பதற்காக ஜமால் விடயத்தில் தினமும் வெளிவரும் பொய்களையும் கற்பனைகளையும் சுட்டிக்காட்டி வருகிறோம்.
ஊடகவியலாளர்கள் என்போர் சமூக மேம்பாட்டுக்கு உழைக்கும் சமூக பற்றாளர்கள். ஆனாலும் வெளிநாடுகளின் நலன்களுக்காக உள் நாட்டை காட்டிக்கொடுக்கும் ஊடகவியலாளரும் உள்ளனர்.
ஓர் இந்திய எழுத்தாளரோ அமெரிக்க ஐரோப்பிய, இலங்கை எழுத்தாளரோ அந்நாடு பற்றி மிக மோசமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு விமர்சித்தால் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சவூதியை பற்றி சவூதியர் ஒருவர் காரசாரமாக தாக்கினால் இதனை நல்லவிசயமாக பார்க்கின்றனர்.
உலகில் உள்ள நாடுகளிலேயே 95 வீதம் மக்கள் நிம்மதியாக வாழும் நாடு சவூதி மட்டும்தான். இஸ்லாம் அதிகமாக வாழும் நாடும் சவூதிதான். ஆனால் எப்படியாவது அந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ரசிக்க பல நாடுகள் கனவு காண்கின்றன.
இந்த வகையில் ஊடகவியலாளர் ஜமால் வெளிநாட்டில் இருந்து கொண்டு சவூதியை விமர்சித்தமை தாய் நாட்டை காட்டிக்கொடுத்தமையாகவே சவூதி சாசனம் சொல்கிறது. இது உண்மை மற்றும் யதார்த்தமாகும்.
ஜமால் கொல்லப்பட்டது சம்பந்தமாக வரும் செய்திகளில் பல பொய்யானவை என்பதை அப்போதிருந்தே நான் சொல்லிவருகிறேன். இது திட்டமிட்ட கொலையாக தெரியவில்லை.
நமது நாட்டிலும் பல ஊடக செயற்பாட்டாளர்கள் மிக இலகுவாக கொல்லப்பட்டுள்ளனர். இன்று வரை கொலையாளிகள் கண்டு பிடிக்கப்படவுமில்லை. ஐ நாவும் முட்டி மோதி குப்பற விழுந்து விட்டது.
ஆனால் ஜமால் கொலை விடயத்தில் நேரடியாக சவூதி அரசை எடுத்த எடுப்பில் குற்றம் சொல்வது பிழை. இது கைகலப்பில் நடந்த கொலையாகும். இன்னமும் ஜமாலின் உடல் கிடைக்காத நிலையில் அவரின் விரல்கள் வெட்டப்பட்டது, துண்டு துண்டாக அரியப்பட்டார் என விக்ரமாதித்தன் கதைகளை பரப்புவது தவறாகும்.
உண்மையை பேச வேண்டும். ஆதாரங்களை வைத்து எழுத வேண்டும். முஸ்லிம் உலகம் பற்றி ஆங்கில பத்திரிகைகள் எழுதுவதை ஏற்பவன் மகா முட்டாள்.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி
தயவுசெய்து இதுபோன்ற மீஹரகாக்களின் எழுத்துக்களை இங்கு பிரசுரித்து வாசகர்களின் பெறுமதியான நேரங்களை மண்ணாக்க வேண்டாம் என பணிவாக இந்த இணையத்தளத்தின் ஆசிரியரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDeleteஐயோ பாவம்.இதெல்லாம் ஒரு கட்டுரை
ReplyDeleteMay Allah Bless the Writer for his neutral approach toward this issue.
ReplyDeleteONLY those who hate Saudi due to their attachment to groups in the name of Islam and those who give preference to their Emotional feeling over Islamic approach will oppose your article.
The do not see the long term plan of the Kuffar toward Muslim lands..they only use Microscope to see micro matter and see as macro matters.
May Allah Guide the Muslim Rulers and Public to approach every issue as per ISLAMIC law.
Mr. writer and Saudi sympathisers Please note one thing, Saudi was in denial from the day of Jamal's killing that he left the embassy in Turkey. I think Turkey will or (maybe will not) release the details of the killing. The whole world says MBS is behind this killing but just waiting to see the evidence in this regard. Caliph Omar (rali) was criticized for his actions by the people, so what is the big deal in criticising these Kings and princes? Wrong is wrong whoever does it.
ReplyDeleteசவூதியின் முன்னாள் சட்டத்தரணியும் சட்டத்துறை ஆலோசகருமான முஹம்மத் அல் மிஷைல் அல் கஹ்தானி சவூதி அரசாங்கத்திற்கும் அதன் கொள்கைகளுக்கு தான் எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். யூடியுப் ஒளிநாடாவில் தோன்றிய கஹ்தானி, சவூதி அரசாங்கத்தின் அடக்குமுறை கொள்கைகளும் சவூதி குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் மோசமான நிலைக்குச் செல்லும் வறுமையும் நாடு முழுவதிலும் நீடிக்கும் வேலையில்லாப் பிரச்சினையுமே தனது எதிர்ப்புக்கான காரணம் என்று விளக்கியுள்ளார்.
ReplyDeleteதற்போது கஹ்தானி பிரிட்டன் தலைநகர் லண்டனில் வாழ்கிறார். சவூதி அரசாங்கத்தை எதிர்க்கின்ற அனைவரோடும் ஒத்துழைத்துச் செல்ல தான் தயார் என்று அறிவித்துள்ள கஹ்தானி, சவூதியின் இன்றைய ஆட்சி சர்வதிகாரமும் ஊழலும் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார்.
புத்திஜீவிகளையும் ஆலிம்களையும் கைதுசெய்து சித்திரவதை செய்யும் நிலைமைக்கு சவூதி அரசாங்கம் வந்துள்ளதை கஹ்தானி கண்டித்துள்ளார். (meelparvai.com)