ஜனாதிபதி என்னை நியமித்துள்ளதை, வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன் - பைஸர்
புதிய அரசாங்கத்தில் இலங்கை மக்களுக்கு எவ்வித கட்சி பேதங்களுமின்றி சேவையாற்றுவேன் என, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய அரசாங்கத்தை, தேவையான நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்து அமைத்தது மட்டுமல்லாமல், அந்த அரசாங்கத்தில் மீண்டும் என்னை மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை கெபினட் அமைச்சராக, இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை, எனது வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
ஜனாதிபதி என்மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். இப்பொறுப்பை, விசுவாசத்துடன் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து, இன மத மொழி கட்சி பேதங்களின்றி சேவையாற்றுவேன். நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண மற்றும் உள்ளூராட்சி, இதேபோல் விளையாட்டுத்துறைப் பிரிவுகளில் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரினதும் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு சகல விதத்திலும் அர்ப்பணிப்போடு என்னால் இயன்ற உதவி ஒத்தாசைகளைப் புரிவேன். இதேபோல், மக்களோடு மக்களாக, தோலோடு தோல் நின்று, அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நலன்புரி தொடர்பிலான விடயங்களிலும் நான் அமைச்சர் என்ற வகையில் உறுதிப்பாட்டோடு என்னை அர்ப்பணம் புதிய அரசாங்கத்தை, தேவையான நேரத்தில் சரியான தீர்மானம் எடுத்து அமைத்தது மட்டுமல்லாமல், அந்த அரசாங்கத்தில் மீண்டும் என்னை மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை கெபினட் அமைச்சராக, இலங்கை மக்களுக்கு சேவை செய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதை, எனது வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன்.
ஜனாதிபதி என்மீது நம்பிக்கை வைத்து, மீண்டும் இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துள்ளார். இப்பொறுப்பை, விசுவாசத்துடன் தொடர்ந்தும் பேணிப்பாதுகாத்து, இன மத மொழி கட்சி பேதங்களின்றி சேவையாற்றுவேன். நாடளாவிய ரீதியிலுள்ள மாகாண மற்றும் உள்ளூராட்சி, இதேபோல் விளையாட்டுத்துறைப் பிரிவுகளில் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரினதும் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு, அவர்களுக்கு சகல விதத்திலும் அர்ப்பணிப்போடு என்னால் இயன்ற உதவி ஒத்தாசைகளைப் புரிவேன். இதேபோல், மக்களோடு மக்களாக, தோலோடு தோல் நின்று, அவர்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நலன்புரி தொடர்பிலான விடயங்களிலும் நான் அமைச்சர் என்ற வகையில் உறுதிப்பாட்டோடு என்னை அர்ப்பணம் செய்கிறேன். என்று, அமைச்சர் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Ok Kadir Khan, good luck to Faiser.
ReplyDeleteஎழும்புத் துன்டுக்கு வாழ் ஆட்டுற நாய்கள்
ReplyDeleteNational List + Cabinet Minister is a jackpot.......
ReplyDelete