Header Ads



நிந்தவூர் ஆதார வைத்தியசாலை, சாதனை படைத்தது


ஜனாதிபதி பசுமை விருது - 2018    இல் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு மாகாண மட்டத்தில் முதலாவது இடமும் தேசிய ரீதியில் இரண்டாவது இடமும் கிடைத்திருப்பது நிந்தவூர் மண்ணுக்கு கிடைத்த பெரும் கெளரவமாகும். இவ்விருது வழங்கும் வைபவமானது இன்று பண்டாயநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜானதிபதி பங்குபற்றுதலுடன் நிகழ்வுற்றது.

குறித்த இவ்வைபவத்தில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தேசிய பசுமைக்கான அங்கீகாரத்தை  வைத்தியசாலையின் அத்தியட்சகர் என்ற ரீதியில் திருமதி. ஷஹீலா ராணி இஸ்ஸத்தீன் தலைமையிலான குழு மகுடமேற்றுக்கொண்டது. 

இது நிந்தவூருக்கு மட்டுமல்லாது முழு கிழக்கு மாகாணத்துக்கும் கிடைத்த பசுமை வெற்றி, இது போன்ற பல வெற்றிகளுக்காக எவ்விதமான சவால்களையும் தான் ஏற்றுக்கொள்ள தயார்  எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


(எம்.எம்.மத்தீன்)


1 comment:

  1. Still I can remember the day when the new maternity building was opened in 1960's while my brother in law Doctor Thillainathan Jeganathan was working at the Ninthavur Dispensary

    ReplyDelete

Powered by Blogger.