புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதா..? இல்லையா...??
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை தொடர்ந்தும் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து விரிவான பரிசீலனையை மேற்கொள்ள அடுத்தவாரம் குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கண்டி - ஹேவாஹெட்ட மத்திய மகா வித்தியாலத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை தேசிய ரீதியான ஒரு போட்டியாக ஏற்படுத்தக்கூடாது.
எனவே, மாணவர்களின் இளமைக் காலத்தைப் பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, கல்வித்துறை மற்றும் சிறுவர்களின் மனநிலை தொடர்பான நிபுணர்கள், அதிபர்கள் மற்றும் நிர்வாக சேவை அதிகாரிகள் உள்ளடங்களாக குழுவொன்றை அமைக்க உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment