Header Ads



உனக்கானது தங்கக் கூண்டா..? தகரக் கூண்டா..?? என்ற அற்ப ஆராய்ச்சியை விட்டுவிடு


-கம்மல்துறை ஷரான்-

சோதரி -
நான்கு சுவர்களுக்குள்
உன் வாழ்வை
சுருக்கிக் கொள்ளாதே !

தொலைக்காட்சியில்
தொலைந்த நாட்கள் போக
ஏதுமீதம் உன் வாழ்வில் ?

"கோலங்க "லில் நீ கரைந்து
வாழ்வை
அலங்கோலமாக்கினாய்!
"சித்தி " யில் நீ ழூழ்கி
மறுமை சித்தியை
கோட்டை விட்டாய் !
வாழ்வை இழக்காதே -
துளக்கு !

பொழுது போக்குவதற்கல்ல
ஆக்குவதற்கு !

T. V .க்கு முன்னால்
ஆவி போனால்
உன் மையப் பெட்டி
மனக்குமா ?கணக்குமா ?

ரமழானில் கூட
ரசித்து ரசித்து T v யை தின்கிறாய்
உன் பட்டினி நோன்பாகுமா ?
வீண் போகுமா ?

இறை பயத்தில்
வரவில்லை அழுகை -
இரவு நாடகங்களில்
தொலந்தது தொழுகை !

வாழ்வை அசுத்தப்படுத்தாதே -
அர்த்தப்படுத்து !

இருக்கிற மட்டும்
இருந்து விட்டு
இருந்த இடத்தை தேய்த்து விட்டும்
போய் விடுவோம்
என்று யார் சொன்னது ?

பெண்ணே
அடுக்களையும் அகப்பையும்
டீக்கப்புப் டீ விப் பெட்டியுமே
உன் இலட்சியமா ?

உனக்கானது
தங்கக் கூண்டா ?
தகரக் கூண்டா ?
என்கிற அற்ப
ஆராய்ச்சியை விட்டு விட்டு
உன் சிறகுகளையும்
விரிக்கத் தொடங்கு !

கொல்லையில் மட்டும்
கூட்டிப் பெருக்கியது போதும்
வா 
சமூகத்தின் தொல்லைகள்
சுத்தம் செய்வோம் !

அபாயாவுக்குள்
மானம் மட்டும் மறை -
தானம் மறைக்காதே
செய் !
உன் நேரம்
உனதுழைப்பு
பரிவு    உனதறிவு
எல்லாம் தானம் செய் !

நாளை நீ
சரித்திரமாவாய்!
   
     

No comments

Powered by Blogger.