ரணிலுக்கு ஞாபக மறதி, நோய் ஏற்பட்டுள்ளது - ரோஹித
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சாப்பிடாமல் அலரி மாளிகையில் உள்ள பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -29 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பழைய விடயங்கள் மறக்கும் ஞாபக மறதி நோய் ஏற்பட்டுள்ளது.
என்ன அந்த ஞாபக மறதி நோய்? கடந்த 2015ஆம் ஆண்டில் நடைபெற்றது ஜனாதிபதி தேர்தலாகும். இந்த தேர்தலில் ஜனாதிபதி ஒருவரே தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் முடிகளைப் போன்றே ஓர் நிலைமை ஏற்பட்டது.
குறித்த காலப் பகுதியில் ரணிலுடன் 44 நாடாளுமன்ற உறுப்பினர்களே இருந்தார்கள், இது பற்றி மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்றுக் கொண்டதனைத் தொடர்ந்து 44 உறுப்பினர்களைக் கொண்ட ரணில் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் ஓர் முன்னுதாரணத்தை வழங்கியிருந்தார், அதிகாலை 3.00 மணியளவில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி சென்றார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க காலை, பகல் உணவு உட்கொள்ளாது அலரி மாளிகையில் அமைந்துள்ள ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
இதேவேளை, ஏனெனில் தான் எழுந்து சென்றால் தமத கட்சியின் உறுப்பினர் ஒருவர் அந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுவார் என்ற அச்சமே இதற்கான காரணமாகும் என ரோஹித அபேகுணர்தன தெரிவித்துள்ளார்.
மூளைக் கோளாறு கொண்டவர்களின் உளரல்களை நாம் வாசித்து எமது மூளையைக் குழப்பிக் கொள்ளும் காலம்???
ReplyDelete