Header Ads



ஜனாதிபதி மாளிகைக்குள், மலட்டுத் தன்மையை ஏற்படுத்த முயற்சி

ஜனாதிபதி மாளிகையில் படையெடுத்துள்ள பூனைகளை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம், கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலக வளவில், பூனைகளின் இனப்பெருக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக ஜனாதிபதி மாளிகையில் எவரும் குடியிருக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.

ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து கொழும்பு மாநகர சபை தனக்கு அறிவித்துள்ளதாகவும் எனினும் பூனைகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவது முடியாத காரியம் எனவும் மாநகர சபை கால்நடை மருத்துவர் ஐ.வீ.பி. தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

பெண் பூனைகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. அத்துடன் பூனைகளுக்கு கொழும்பில் தனியான காப்பகங்கள் இல்லை.

அடுத்த வாரம் பூனைகளுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்த கால்நடை மருத்துவர் குழு ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் தர்மவர்தன குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. பூனைகளுக்கு அம்பாறை கொத்து கொடுக்கலாமே.

    ReplyDelete
  2. வேலை இல்லாதவன் பூனையை பிடித்து சிரைத்தான் என்பதோ?

    ReplyDelete

Powered by Blogger.