மஹிந்தவுக்கும், ஞானசாரருக்கும் புனர்வாழ்வு வழங்கவும் - அருட்தந்தை சத்திவேல்
நாட்டில் இனவாதத்தை தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், நாடாளுமன்ற உறுப்பினர் 225 பேருக்குமே புனர்வாழ்வு தேவைப்படுவதாக, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அருட்தந்தை மா.சத்திவேல் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்து வருவதாகவும், உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதி ஒருவர், வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் தெரிவித்தார்.
மேலும் அரசியல் கைதிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால் அவர்களின் உடல்நிலை படுமோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
Post a Comment