ஜனாதிபதி மாளிகையிலிருந்து, மைத்திரியை விரட்டியடிப்போம் - முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டியடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ரஹ்மான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"அலரிமாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு 24 மணிநேர அவகாசத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு விமல் வீரவன்ஸ வழங்கினார். அவ்வாறு வெளியேறாவிட்டால் அலரிமாளிகை முற்றுகையிடப்படும் எனவும் மிரட்டினார்.
ஆனால், பல நாட்கள் கடந்தும் நாம் குறித்த மாளிகையிலேயே இருக்கின்றோம். விமல் எங்கே?
எங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. அவரை விரட்ட முடியாது. குறுக்கு வழியில் பிரதமராகத் தெரிவான மஹிந்த ராஜபக்ஷவை நாம் ஆதரிக்கப்போவதில்லை.
ஜனநாயக விரோதச் செயலுக்குத் துணைபோன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையிலிருந்து விரட்டியடிப்போம்” என்றும் ஐ.தே.கயின் கொழும்பு மாவட்ட எம்.பி முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரை விரட்டி அடிப்பது இருக்கட்டும். அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வாங்க.
ReplyDeleteஅவரை விரட்டி அடிப்பது இருக்கட்டும். அர்ஜுன் மகேந்திரனை நாட்டுக்கு கொண்டு வாங்க.
ReplyDeleteசிறுபாண்மை இனங்கள் தொடர்பாக
ReplyDelete.
யார் பதவிக்கு வந்தாலும் தமிழ், மலையக தமிழ் மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் குறிப்பாக மகிந்த பதவிக்கு வந்தால் கிழக்கிலங்கையின் சமநிலை பாதிப்படையக்கூடும்..
.
கிழக்குமாகாண முஸ்லிம்களின் தனிமைப்படுதல் நெருக்கடி மட்டத்துக்கு உயர்ந்து செல்கிறது. ஏனைய இனங்களோடான தனிமைப்படுதலைவிட தென்னிலங்கை முஸ்லிம்களோடு தனிமைப்படுதல் செம்மைப் படுத்தபடாவிட்டால் ஆபத்தானதாக அமையலாம். இதுபற்றி வடமாகாண முஸ்லிம்களுக்கும் கவனம் செலுத்தவேண்டும்.
கொக்கரித்தது போதும் முட்டையிடும் வழியை பாருங்கள்
ReplyDelete