செவ்வாயன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம், மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணைக்கும் நடவடிக்கை
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து அதிபர் மைத்ரிபால சிறிசேனவால் நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுறுமாறு வலியுறுத்தியும் செவ்வாயன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.
"பின்கதவு வழியாக ஒரு அமைச்சரவை பதவியேற்க முடியாது. ஆனால், மகிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே பிரதமராக பதவியேற்றுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபணம் செய்துவிட்டு புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொள்ளட்டும்," என ஞாயிறன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
Post a Comment