ரணில் வேண்டா, பொண்டாட்டியானது ஏன்..? பட்டியல்படுத்துகிறார் மைத்திரிபால
தனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று -28- வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் வழி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டு அரசியலில் எந்த நபரும் பொறுப்பேற்காக சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.
அது பாரதூரமான அரசியல் சவால் என்பது போல் ஆபத்து நிறைந்தது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல? எனக்கு, எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த சவாலை எதிர்கொண்டேன்.
அதேபோல் கடந்த 26ஆம் திகதி நான் எடுத்த தீர்மானம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை விட மிகப் பெரிய சவாலுடனான தீர்மானம்.
உங்களதும், எனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காகவும் அன்பான பொது மக்களுக்காகவுமே இவை அனைத்தையும் நான் செய்தேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.
எனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டார்.
இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ரணில் விக்ரமசிங்க அழித்தார் என்ற நான் நினைக்கின்றேன்.
2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.
எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.
அத்துடன் ரணில் விக்ரமசிங்க கூட்டாக முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக தனியாக தீர்மானங்களை எடுத்தார்.
மிகவும் முரட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் நடந்துக்கொண்டார். இதனால், அரசாங்கத்திற்குள் பாரதுரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.
கூட்டாக முடிவுகளை எடுக்காது அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தனர். இதன் காரணமாக நாடு என்ற வகையில் நாம் துரதிஷ்டவசமாக நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.
கடந்த மூன்றரை வருடங்களில் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகளை கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் கலாசார வேறுபாடுகளை கண்டேன்.
இவை அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
All lies. He knows he cannot contest in 2019 in the UNP Seat. He has now selected the route through Mahinda. However, Mahinda will throw him soon.
ReplyDeleteMahinda will teach him a lesson soon...
ReplyDeleteSoon you will see it .
Very true,as ILMA pointed out, he has made his own pit to fall into it sooner or later which is nothing but true.
ReplyDeleteஅது சரி, ஆனால்....அடிக்கடி கணவர்கள்/பெண்டாட்டிகளை மாற்றிக்கொண்டிருப்பவரை என்னவென்று சொல்வது?
ReplyDelete2015 யில் ஒன்றாக மகிந்தவுடன் அப்பம் சாப்பிடவிட்டு துரோகம் செய்தார். இப்போ ரணிலுக்கு.
அப்போது மகிந்த கொலை தன்னை கொலை செய்ய போவதாக சொன்னார், இப்போ ரணில் தன்னை கொலை செய்ய plan செய்தார் என்கிறார்.
போகிற போக்கை பார்த்தால் அது தான் உண்மையாகவே நடக்கப்போகும் போல. ஒரு முறை துரோகி, எப்போதும் துரோகி தான். மகிந்த அடிபட்ட பாம்பு.
No need lies people's knows very well better commit suicide
ReplyDelete*சுருக்கம்* (பொரிக்கன் சட்டியில் துடித்தமீனை எடுத்து நெருப்பில் தவறவிட்டுவிட்டார்)
ReplyDelete*நாட்டு சொத்தை சின்னகள்ளர்களிடமிருந்து மக்களால் விரட்டப்பட் பெறும் கள்ளர்களிடம் மைதிரி ஒப்படைத்து தன் அதிகாரத்தையும் இழந்து விட்டார்
கேள்வி நகைப்புக்குறிய ரனிலையே அடக்கமுடியாத இந்த ஜனாதிபதி, அரக்கன் மஹிந்தவையும் அவன் கூட்டத்தாரையும் எவ்வாறு அடக்கி ஆட்சி செய்வார்? *இந்தக்கூட்டம் மிக விரைவில் இந்த கோமாலி ஜனாதிபதியை நோக்கி உயிர்பிச்சை தேடி எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டாய் நாங்கள் செய்யும் களவுகளையும் அட்காசங்களையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கவுமென எச்சரிபத்து மைத்திரிக்கு பாடம் சொல்லி கொடுத்து பலி தீர்பார்கள்!
*சுருக்கம்* (பொரிக்கன் சட்டியில் துடித்தமீனை எடுத்து நெருப்பில் தவறவிட்டுவிட்டார்)
ReplyDelete*நாட்டு சொத்தை சின்னகள்ளர்களிடமிருந்து மக்களால் விரட்டப்பட் பெறும் கள்ளர்களிடம் மைதிரி ஒப்படைத்து தன் அதிகாரத்தையும் இழந்து விட்டார்
கேள்வி நகைப்புக்குறிய ரனிலையே அடக்கமுடியாத இந்த ஜனாதிபதி, அரக்கன் மஹிந்தவையும் அவன் கூட்டத்தாரையும் எவ்வாறு அடக்கி ஆட்சி செய்வார்? *இந்தக்கூட்டம் மிக விரைவில் இந்த கோமாலி ஜனாதிபதியை நோக்கி உயிர்பிச்சை தேடி எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டாய் நாங்கள் செய்யும் களவுகளையும் அட்காசங்களையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கவுமென எச்சரிபத்து மைத்திரிக்கு பாடம் சொல்லி கொடுத்து பலி தீர்பார்கள்!
Loosuppayal...Ivanellam oru prez....Off...Very shame on u...
ReplyDeleteDear Public, did u notice his speech, he was reading which has prepared by someone.....See his eyes...big idiot Kaju mahattaya!!!