பதவியை பிச்சை எடுத்த மஹிந்த, மைத்திரியே உங்களுக்கு வெட்கமில்லையா..? ரஞ்சன்
மஹிந்த ராஜபக்சவிற்காக பணம் செலவிடுவதனை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டுமென ரஞ்சன் ராமநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் இழிவான முறையில் பதவியை பெற்றுக்கொள்கின்றார். எப்போது தன்னை போராட்ட வீரராக காட்டிக் கொள்ளும் மஹிந்த ராஜபக்ச மிகவும் இழிவான நிலையில், மிகவும் கேவலமான முறையில் மஹிந்த பதவியை பிச்சை எடுத்துள்ளார்.
எனக்கு பதவியை வழங்குங்கள் என்று மண்டியிட்டு மைத்திரியிடம் கெஞ்சி கேட்டார். சீனா எமக்கு போரின் போது இலவசமாக ஆயுதம் வழங்கியது, கடனுவதி வழங்கியது உண்மைதான் அதற்காக நன்றி பாராட்டுகின்றோம். ஆனால் அதற்காக இலங்கையை சீனாவிற்கு விலைக்கு எழுதிக் கொடுக்க முடியாது.
தயவு செய்து கேட்டுக்கொள்கின்றேன் மஹிந்த ராஜபக்சவிற்கு செலவிடுவதனை நிறுத்திக் கொள்ளவும். கடந்த தேர்தலின் போதும் சீனா மஹிந்தவிற்காக பெருந்தொகை செலவிட்டது.
தற்பொழுதும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க சீன பெருந்தொகை பணத்தை செலவிடுகின்றது.
வசந்த சேனாநாயக்கவின் மரபணுவை சோதித்து பார்க்க வேண்டும், அவர் உண்மையிலேயே சேனாநாயக்க குடும்பத்தைச் சேர்ந்தவரா என்பது சந்தேகமே.
இவ்வாறு கட்சித் தாவுவதனை விடவும் வேறும் இழிவான செயல்களின் மூலம் பணம் சம்பாதித்திருக்கலாம்.
தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என மஹிந்தவை தூற்றிய ஜனாதிபதி மைத்திரி இப்பொழுது அந்தபக்கம் சேர்ந்துள்ளீர்களே.
உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ” என ரஞ்சன் ராமநாயக்க மிகவும் ஆவசமாகவும் கடும் தொனியிலும் உரையாற்றி இருந்தார்.
Post a Comment