Header Ads



சிங்களமொழி அரசியலமைப்பின்படி ஜனாதிபதி செயற்பட்டார் - ஆங்கிலத்தை விடுத்து, சிங்களத்தில் தெளிவுபெற ரணிலிடம் கோரிக்கை

சிங்கள மொழி மூலமான அரசியலமைப்பிற்கு அமைய எதேர்ச்சையாக பிரதமரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.தகவல் ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

“நீதி மன்றின் தீர்ப்புக்கள் யாவும் சிங்கள மொழியில் உள்ள அரசியலமைப்பிற்கமையவே அமைகின்றன. ரணில் விக்கிரமசிங்க ஆங்கிலத்தில் உள்ள அரசியலமைப்பை படித்து விட்டு அதற்கமையவே செயற்படுகிறார்.

அதன் படியே பிரதமரின் பதவி நீக்கம் மற்றும் புதிய பிரதமர் தெரிவு என்பன அரசியலமைப்பிற்கு முரணாகவே அமைந்துள்ளன என  வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பின் போது ரணில் தெரிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க ஆங்கில அரசியலமைப்பை விடுத்து சிங்கள அரசியலமைப்பை படித்து தெளிவு பெற வேண்டும்.” என தெரிவித்தார்.

2 comments:

  1. அப்ப சிங்களத்தில் நாய் என்ற வார்தைக்கு இங்கீலீசில் குரங்கா.... நீங்க எல்லாம் ஒரு அ மை ச்சர்...

    ReplyDelete
  2. என்ன அநியாயம் மக்களே!!!!

    நம்ம நாட்டில மொழி மாறும் போது CONSTITUTION மாறிப்போவதாக ஒரு அமைச்சர் சொல்லி இருக்கார்.

    தமிழ் மொழி CONSTITUTION இல் என்ன எழுதி இருக்கு என்று அறிந்தவர்கள் சொல்லவும்

    ReplyDelete

Powered by Blogger.