Header Ads



கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் ரோஹித்தவின் எச்சரிக்கை

-மு.இ.உமர் அலி-

இன்றிலிருந்து 27.10.2018 ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மதியம் 12 மணி வரை  சமயப்பாடசாலைகள் தவிர்ந்த வேறு எதுவித பிரத்தியேக மற்றும் பாடசாலை வகுப்புக்கள் பாடசாலைகளிலும் டியூசன் நிலையங்களிலும் நடைபெறக்கூடாது என கிழக்குமாகாண ஆழுனர் ரோகித போகொல்லாகம அவர்கள் இன்று  கட்டளை பிறப்பித்துள்ளார்.

இன்று பிற்பகல் ஆழுனர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டம் ஒன்றின்போதேப் இந்த அறிவித்தலை ஆழுனர் பிறப்பித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலினை மீறி ஞாயிறு காலை வகுப்பு நடாத்துபர்களிர்கு எதிராக பல ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றும் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பிரத்தியேக பாடம் ஒன்றினை நடத்தியது  உறுதிப்படுத்தப்பட்டால்   அவருக்கு ஐந்து வருடங்களுக்கு மிகவும் தூரமான இடத்திற்கு இடமாற்றம் வழங்குமாறு மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு  கண்டிப்பான உத்தரவிட்டதுடன்  இவ்விடையத்திர்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பொலீஸ் அதிகாரிகளையும்  கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்.கல்வி அமைச்சின் செயலாளர்,மாகாண கல்விப்பணிப்பாளர்,நான்கு மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்க தலைவர்கள் மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகள் உட்பட கிழக்குமாணத்தின் இன்னும்  பல உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

2 comments:

  1. Why only in Eastern Providence? Why this is not implemented in the Central, Western and Southern Provinces?

    Is it a plan to eradicate or undermine the eastern norther provincial educational development?????

    ReplyDelete

Powered by Blogger.