மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி, பழைய மாணவர்களுக்கு இடையிலான போட்டி
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றியமான ‘Xzahirians’ எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான Inter-Batch Futsal Tournament புட்சல் கால்பந்தாட்டப் போட்டி மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மேற்படி புட்சல் கால்பந்தாட்டப் போட்டியில் 25 வயதிற்குற்பட்ட பிரிவில் 2015 விடுகை வருட பழைய மாணவர்கள் (82nd Batch) டீ.எஸ்.சாமுவேல் நினைவுக் கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது. அதில் 2012 விடுகை வருட பழைய மாணவர்கள் (79th Batch) இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இப்பிரிவில் அதிக கோல்களைப் பெற்ற 82nd Batch அணியின் தலைவர் அஸ்காப் நியாஸ் தங்கக் காலணி விருதைப் பெற்றுக் கொண்டார்.
26 -35 வயதிற்குற்பட்ட பிரிவில் 2011 விடுகை வருட பழைய மாணவர்கள் (78th Batch) கே.ஜே.பொன்னையா நினைவு கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது. அதில் 2008 விடுகை வருட பழைய மாணவர்கள் (75th Batch) இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் இப்பிரிவில் அதிக கோல்களைப் பெற்ற 75th Batch அணியின் தலைவர் மொஹமட் ஆஸிர் தங்கக் காலணி விருதைப் பெற்றுக் கொண்டார்.
36-45 வயதிற்குற்பட்ட பிரிவில் 1998 விடுகை வருட பழைய மாணவர்கள் (65th Batch) டி.எல்.எம்.ஹனீபா நினைவு கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது. அதில் 1995 விடுகை வருட பழைய மாணவர்கள் (62nd Batch) இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதிக கோல்களைப் பெற்ற 75th Batch அணியின் தலைவர் மொஹமட் செரோன் தங்கக் காலணி விருதைப் பெற்றுக் கொண்டார்.
45 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் ‘எப்கோ’ அணி கே.எம்.ஹனீபா சவால் கிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானதுடன் ‘ரெட் ஈகல்’ அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இப்பிரிவில் அதிக கோல்களைப் பெற்ற ‘எப்கோ’ அணி முன்கள வீரர் சாமில் தங்கக் காலணி விருதைப் பெற்றுக் கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
(ராயிஸ் ஹஸன்)
Post a Comment