அக்குறணை மக்கள் பூரண, ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அக்குறணை நகரை வெள்ள அனர்த்தங்களிலிருந்தும் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு அக்குறணை மக்கள் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் எனவும். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கப்பட்டாலே இதற்கு ஓர் நிரந்தரத் தீர்வு காணமுடியுமெனவும் அக்குறணை பிரதேச சபைத் தலைவர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்துள்ளார்.
முன்னெடுக்கப்படவுள்ள அக்குறணை நகரின் வெள்ள தடுப்புப்பணிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் வெள்ள அனர்த்தங்களைத் தடுப்பதற்கும் நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதற்கும் நியமிக்கப்பட்டுள்ள விசேட செயலணி தாமதமின்றி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அக்குறணை மக்கள் தற்போது பிங்கா ஓயாவை சுத்திகரிப்பது போன்ற ஆரம்ப சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
அக்குறணை பிரதேச சபை வெள்ள அனர்த்தங்களைத் தடுக்கும் செயற்திட்டங்கள் தொடர்பில் மக்களையும் வர்த்தகர்களையும் தெளிவுபடுத்தியுள்ளது. அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ரவூப் ஹக்கீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோருடனும் தொடர்புகளைப் பேணி வருகிறது என்றார்.
Post a Comment