Header Ads



இலங்கையின் ப்ரியாவுகக்கு உதவிய, தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்

குவைத்தில் பணிபுரிந்து வந்த இலங்கையை சேர்ந்த ப்ரியா என்கிற தமிழ் ஈழ சகோதரி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

பொருளாதாரத்தில் பெரிதும் பின் தங்கிய அந்த சகோதரிக்கு அவர் பணிபுரிந்து வந்த நிறுவனமும் எந்த உதவியும் செய்யாமல் கைவிட்ட நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக அந்த சகோதரிக்கு தாயகம் செல்ல விமான டிக்கெட் கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கையில் அவருக்கு தேவையான மருத்துவத்திற்கான பொருளாதார உதவிகளையும் நமது sltj தலைமை மூலமாக செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய் குறித்த விழிப்புணர்வும் அதற்கான மருத்துவ முறை குறித்தும் விளக்கி அந்த சகோதரிக்கு ஆறுதல் கூறப்பட்டது.

#பிறர்_நலம்_நாடுவதே_இஸ்லாம்

Mohamed Ali Jinna


2 comments:

  1. Why publish a photo like this??

    ReplyDelete
  2. “பிறர் நலம் நாடுவதே இஸ்லாம்”
    இதனை இஸ்லாமியர்கள் கூறக்கூடாது, ஏனைய மதத்தார் கூறவேண்டும், அந்தளவிற்கு எமது செயற்பாடுகள் அமைய வேண்டும், அதில்தான் பெறுமதியுண்டு.
    பிறர் நலம் நாடும் இவர்கள் தங்களது கொள்கைக்கு மாற்றமானவர்களது நலனை நாடுவதில்லையே. ஊரெல்லாம் அந்த மக்களை நிம்மதியாக வாழ விடாமல் என்னா பாடுபடுத்துகிறார்கள்.
    இன்று முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமியர்கள் என்ற பெயரெல்லாம் மறைந்து தௌஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, தரீக்கா, சியா, சுன்னி........ இவைகள் தான் எமது அடையாளமாக மாறிக்கொண்டு செல்கின்றன. இதில் பிரித்தாளுவோர் வெற்றியடைந்துள்ளனர். இதனை பிரிந்து கொண்டிருப்போர் உணர்வதற்கு பணமே தடையாகவுள்ளது.
    முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதில் எந்த இயக்கத்தைச் சோ்ந்தவர்கள் என்று யாராலும் கூறமுடியுமா?
    அன்று நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹுத்தஆலா உகது மலையை தங்கமாக மாற்றி வழங்கவா என்று கேட்டான். நபி (ஸல்) அவர்கள் தமது மார்க்கப் பணிக்கான ஈடேற்றத்தினை இந்த உலகில் கேட்டிருந்தால் எமது மார்க்கம் இவ்வாறு வளர்ந்திருக்காது.

    ReplyDelete

Powered by Blogger.