முஸ்லிம்கள், மகிந்தவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கலாமா..?
இலங்கையில் இடம் பெற்றிருக்கும் அதிகாரக் காய் நகர்த்தல்களில் முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக உள்ளனரா?? என்ற ஒரு பரவலான கோசம் இன்று முன் வைக்கப்பட்டுள்ள தருணத்தில் , தீர்மானம் மேற்கொள்வது வெறும் அரசியல் கட்சிகளின் பங்கு மட்டுமல்ல, மாறாக சமூகத்தின் அனைவரும் இது பற்றிய கருத்துக்களைப் பலமாக முன்வைக்க வேண்டிய தருணத்தில் உள்ளனர்..
பொறுப்புணர்வு,
முஸ்லிம் அரசியல் பலவீனம்,
அரசியலில் வெறும் அரசியல்வாதிகள் மட்டும் சமூகம் தொடர்பான முடிவுகள் மேற்கொள்வதற்கு சமூகத்தில் உள்ளோர் இடமளிப்பதும், பின்னர் பிழைகள் ஏற்படும்போது மட்டும் விமர்சிப்பதையும் விட ,தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னரே தமது அபிப்பிராயங்களை முன் வைப்பது, புத்தி ஜீவிகளினதும்,அமைப்புக்களினதும், சமூகத்தலைவர்களினதும் கடமையாகும.
முஸ்லிம் பிரச்சினைகள்,...
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் "#தனிநாடு" என்பதல்ல, தனிநாட்டுக் கோரிக்கையை எப்போதும் முஸ்லிம்கள் ஆதரிக்கவுமில்லை மாறாக அனைவருக்குமான சுதந்திரமும், ,அபிவிருத்தியும்,, சமய,கலாசார,சமூக,மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மேலதிக, சுதந்திரமுமாகும், இந்நிலை ,இலங்கையை ஒரு சுதந்திர தாய் நாடாக ஏற்றுக் கொண்டபிரஜைகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினையே ஆகும்,
ஆனாலும் அண்மைக்கால அரசியல் நகர்வுகளில் இனவாதம் காணப்பட்டமையும், சர்வதேச தலையீடுகளும் இலங்கை முஸ்லிம்களுக்கான சவால்களாக மாறி உள்ளன, இந்நிலையில் இலங்கையில் இப்போது ஏற்பட்டிருக்கும் "பதவிப் போராட்டத்தில்" ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன, ..
கடந்த கால அனுபவம் ,
மஹிந்தவின் கால இனவாத செயற்பாடுகள் மைத்திரி தலைமையிலான அரசை ஆதரிக்க முஸ்லிம் வாக்காளர்களைத் தூண்டியது, ஆனால் அதன்பின்னரான நல்லட்சியும்,அதில் ரணிலின் பிரவேசங்களும், குறித்த சமூகத்தின் முழு ஆதரவைப் பெற்ற நடவடிக்கைகளாக அமைய வில்லை, இன்னும், அஷ்ரஃப் அவர்களில் ,"ரணில் சாரதியாக இருக்கும் வாகனத்தில் ஏறமாட்டேன் "என்ற கருத்து,மக்கள் மனதில் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது
இனவாத செற்பாடுகள்
ரணிலின் நல்லாட்சியிலும் இனவாத வன்முறைகள் இடம்பெற்றன, மட்டுமல்ல, அவை மஹிந்தவின் ஆட்சியை விட சேதங்கள் அதிகமானவையாகவும், திட்டமிடப்பட்டவையாகவும் இருந்தன.
உலக முஸ்லிம் உறவுகள்,
மஹிந்தவின் காலத்திலும், மைத்திரியின் அணுகு முறைகளிலும், முஸ்லிம். நாடுகளுடனான உறவு நிலை அதிகமானது, ஆனால் ரணில் அரசு அதிகம் மேலைத்தேய, மற்றும் இஸ்ரேல் நலன்சார் அரசாக செயற்பட்டு வந்திருக்கின்றது,... பலஸ்தீனத்தின் நீண்டகால நண்பராக ராஜபக்ஷ் இருப்பது இன்றும் நிலைக்கின்றது
தீர்மானிக்க வேண்டியவை,
ராஜபக்சவின் அரசின் மீதான திருப்தியின்மையின் காரணமாக கொண்டுவரப்பட்ட மைத்திரி அரசு, ரணிலின் உள்ளீர்ப்பு காரணமாக தம்மால் கூற்யவற்றை இன்று செய்ய முடியாது, போய் உள்ளதாக, இன்று ஜனாதிபதி மைத்திரி ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பொருளாதார வீழ்ச்சி, தனது உயிருக்கான, அச்சுறுத்தலினாலேயே, அரசியல் ஆதரவை ரணிலுக்கு விலக்கிக்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்,.
சிந்திக்க வேண்டியது,
இந்த நிலையில் மைத்திரி, இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆட்சி செய்யக்கூடியவராகவும் உள்ளார்,..ராஜபக்ஷவின் காலத்தில் குறித்த சில அபிவிருத்திகள் முஸ்லிம்களுக்கீக இடம்பெற்றதையும் மறக்க முடியாது,
உ+மாக,..
1), வடக்கு மக்களுக்கான வில்பத்து காணிப் பகிர்வு,
2). மட்டக்களப்பில் பல நூறு ஏக்கரில் கட்டப்பட்டுள்ள பல்கலைக்கழகம், ,
3), அளுத்கம கலவரம், உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டமை, மற்றும் நட்ட ஈடுகள்
4). பயங்கரவாத யுத்த முடிவின் மூலம், முஸ்லிம்களின் அச்சம் நீக்கப்பட்டமை, இன்னும் பல..
#ராஜபக்ஷ மன்னிக்க முடியாதவரா???
ராஜ பக்ச தான் முன்னர் செய்த பிழைகளில் இருந்து பாடம் கற்றவராகவே, இன்று மீண்டும் வந்துள்ளார், மட்டுமல்ல சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள , அவரது எதிர்கால ஆட்சி நம்பிக்கைகளுக்காக அவர் சிறப்பாகச் செயற்படவும் வேண்டி உள்ளது,மட்டுமல்ல, இன்று ராரபக்ஷக்களே நாட்டு நலனுக்குத் தேவை என பெரும்பாலானோர் ஏற்கின்றனர்,
இன்னும் ராஜபக்ஷ முஸ்லிம்களால் அறவே மன்னிக்க முடியாத குற்றத்தை செய்யவில்லை, ,அதே பழி ரணில் அரசுக்கும் பல மடங்கு உண்டு,எனவேதான் ஒப்பீட்டு அளவில் ராஜபக்ஷவின் முஸ்லிம் அணுகு முறை பாராட்டுக்குரியது, ஆனாலும் வெளிநாட்டு, #Diaspora தலையீடுகள் ராஜபக்ஷவை "#முஸ்லிம்களின் #நிரந்தர #எதிரியாக்க" முனைகின்றனர்...இதனை நாம் நன்றாகச் சிந்திக்க வேண்டும், அதிலிருந்து மீள இது நல்ல சந்தர்ப்பம்
செய்ய வேண்டியது,.....
எனவேதான், எதிர்வரும் அரசியல் நகர்வுகளில் அதிக முஸ்லிம்களின் தெரிவினால் வந்த மைத்திரிக்கும்,தனது செயல்களில் படிப்பினை பெற்றிருக்கும் மஹிந்தவுக்கும், இன்னுமொரு வாய்ப்பினை நாம் வழங்குவதன் மூலம், முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்களையும், நீக்கி, இலங்கை முஸ்லிம்களின் பல்வேறு பட்ட தமது தேவைகளுக்கான தீர்வுகளையும், எதிர்காலத்தில் அடைந்து கொள்ள முடியும், ........இதுவே பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைப்பாடாகவும் அமைகின்றது,
மாறாக, தலைவர்கள் தமது சொந்த நலன் கருதி மேற்கொள்ளும் தீர்மானங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களின் அன்றாட வாழ்வில் செல்வாக்கு செலுத்தும் என்பதை நாம் அனைவரும் மறக்கக் கூடாது,....அதனை எதிர்கொள்ளக்கூடிய பலமான சக்திகளும் முஸ்லிம்களிடம் இல்லாமையையே அண்மைக்கால சம்பவஙகளும் உணர்த்தி. நிற்கின்றன..
-முபிஸால் அபூபக்கர்-
Kuniya vetchi kummi adichadu podhadaduka?
ReplyDeleteMR might behave in a democratic way hereafter though one can't expect the crooks around him to be the same. The racists elements are very active when MR hold the office. Sirisena never opened his mouth re Digana incidents. So we shouldn't expect from him any help for Muslims in future.
ReplyDeleteIT is not so easy to say Yes..
ReplyDeleteBUT First let Learned Muslims and Political Partly Leaders sit and prepare a comprehensive AGREEMENT that will full fill the needs and expectations and the right of Muslims, Then the let the MR sign the Agreement with responsibility officially. Then we can think of it.
Many points should be agreed.. such as
1. Protecting the life and properties and the rights of Muslims.
2. Punishing those culprit behind all racism conducted against muslims in MR time and MY3 period.
3. Ensuring the payment for all the lost properties during violence against Muslim... From Jaffna evacuation to Digana incident (all)
4. Not keeping hands in Muslim religious related affairs in order to satisfy local groups or foreign states.
5. Arranging ways to resettle the affected Muslims in their places back especially From Jaffna and other war influenced area.
6. Giving JOBS in all the government sectors as per ethnic ratio.
7. NOT using racism on Muslim any more for political gains.
8. many more.
Let them sign an agreement openly and officially ... then will consider our support.
NOTE: Do Not use a way to threatening Muslims and try to get our support to establish the goals.
BE Truthful in your agreement, we Muslim will always support this country for the good of this land.
In total: All the politician from MR, MY3 or RN, we did not enjoy peace or safety in our life.
BUT We Keep TRUST in Allah, We are people of TRUTH and LOOK for such Leaders and not the one who take our votes and then hit at our backs.
இந்த பரதேசி எந்த உலகத்தில விழுது?
ReplyDeleteசந்தர்பத்திற்கு ஏற்ற முறையில் கட்டுரை அமைவதாக தெரிகிறது, மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வடகிழக்கை மட்டும் பற்றி சிந்திக்காமல் முழுநாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் சம்பந்தமாக சிந்தித்து செயற்படும் காலம் இது.
ReplyDeleteசிங்கள மதத் தலைமைகள் சுற்றியிருந்து புதிய பிரதமருக்கு ஆதரவு வழங்குவதை பார்க்கும் போது எம்மவர்கள் தள்ளி நிற்பது அவ்வளவு தூர நோக்கு அல்ல என்பது உண்மை. ஆகையால் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் பணப்பட்டுவாடாக்களுக்கு அப்பால் சற்று சிந்தித்து செயற்பட வேண்டு மென்பதோடு முஸ்லிம் மதத் தலைவர்களின் ஆலோசனைகளையும் பெற்று நிலமைகளை கையாழ்வது சிறப்பாக இருக்கும்.
This Pro-MR message...!!!
ReplyDeleteRemeber now the Ghansara, Another sara thero, Ambipitiya thero, Mathusan, and immediately released today Dearest of My3... Amith....
So, dont compare anything for anyone.....
First u must be a gentle person for real democratic and real for law..
Dont try to jump for selfishness and beyond law....
Law and justice for all....Country, Rights and Democratic are the first!!!
STOP SANDARPPA VAATHAM....
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசமகால அரசியல் மாற்றத்தில் முஸ்லிம்கள் மிக கவனமாக புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து புதிய ஆட்சி மாற்றத்தை அங்கீகரிப்பதே மேல்.
காரணங்கள் -
1) ஜனாதிபதி அவர்களும் மிகவும் நீண்ட அவதாணத்துடனேயே ஆட்சியை மாற்றி இது தேசிய முக்கியம் வாய்ந்த தேவை என கூறியுள்ள, இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பும், பொருளாதாரமும் சீர் செய்யப்படவேண்டிய நிலையில் முஸ்லிம்களும் இந்நாட்டின் இக்கட்டான நிலையில் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதே சிறந்தது.
2) மேலும் இருக்கும் முஸ்லீம் அரசியல் கட்சிகளும் கடந்த பல அரசுகளில் தமது கதிரைகளை பல சலுகைகளுடன் பலப்படுத்தியதை தவிர வேறு எதுவுமே சாதிக்காத நிலையில் மீண்டும் அதை தொடர்வது ஒன்றும் பெரும் குற்றம் அல்லவே.
3) இதுவும் அவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டமாகவே கருதவேண்டும். ஏனெனில் உரிமை ஒப்பந்தகள் பற்றி பேசியவர்கள் வாக்களித்த "எம்மைப்போன்ற மூடர்களுக்கு" இதுவரை எதையுமே வெளிப்படுத்தவும் இல்லை. மேலும் புதிதாய் கிடைக்க இருக்கும் பலன்களை வீண்விரயம் செய்ய வேண்டியதுமில்லை.
4) ரணிலை போன்ற நரி தந்திரவாதியுடனும், துவேஷமுள்ள சம்பிக்கவுடனும், எல்லாம் தெரிந்த மேதாவிபோல பேசும் ராஜித போன்ற நயவஞ்சகர்களுடனும் கூடியிருந்து கும்மாளம் அடித்ததைவிட மஹிந்தவின் (பெரும்பான்மை மக்களின் ஆதரவை கொண்ட) அரசில் சேர்ந்து குறைந்தது பெரும்பான்மை மக்களின் பகைமையையாவது குறைத்து முஸ்லிம்களை பாதுகாக்கலாம்.
வடக்கு மக்களுக்கு வில்பத்துவில் காணி வழங்கலாம் இந்த லூசு சொல்லுது வில்பத்து எங்க இரிக்கி மஸ்லிம்கள் எங்க மீழ் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்றே தெரியாத லூசுகளெல்லம் மகிந்தக்கி வக்காலத்து வாங்கினா மத்த சமூகத்திற்கு நல்ல பெயிட்ஸ் கிடைக்கும் அழுத்கம கலவரம் அடக்கப்பட்டது யாரும் கைதாகவில்லை ஆனால் திகன கலவரத்தில் கைதானவன் இன்றுதான் அதுவும் மகிந்த வந்த பினன்ர்தான் வெளியானான் பயங்கரவாத யுத்த முடிவில் முஸ்லீம்களின் அச்சம் நீக்கப்பட்டதா அல்லது அதிகரிதத்தா?
ReplyDeleteNo more support for mahinda and his team. Can not believe them at all. This author is mahinda supporter i think. You can hold the tail of mahinda but do not say that all muslims like mahinda right now.
ReplyDeleteungalidam niraye kelvihal kekenumpoleiruku so ....mahindhavuku pinkadhavaal support pannunge ...nenge avaral padhikkepadadheverpole posuringeley...nashte eedaam ...evlavu yaryaruku .....uyirhalpala poyirukkey adhatkuriye nashteeedu ?
ReplyDeleteIt is a common sense issues .
ReplyDeleteAG said it is illegal way to appoint PM with out parliamanrt majority?
Now wait and see what happens next
நீதி நியாயம் நேர்மை இது முஸ்லிம்களின் பண்பு
ReplyDeleteஎன்ரு நினைக்கிறேன்
We have also lots of culprits in our community
ReplyDeleteSo, please do not teach the people about Opportunism...
Islam is against to this...be minded....
Always fight for right things
ரோட்டில போரவன்லாம் எழுதிர கட்டுரையை பிரசுரிப்பதை ஜப்னா முஸ்லிம் நிறுத்த வேண்டும்.
ReplyDeleteஅப்துல் றசீட் சகோதரர் கூறுவது போல் சரியான ஒரு open agreement ஊடாக இந்த இக்கட்டாதும் முக்கியத்துவமானதுமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்படவில்லையெனில் முஸ்லிம் சமூகத்துக்கு அவர்கள் இழைக்கும் பாரிய துரோகமாக அமைந்து விடும்.
ReplyDeleteThough the Muslim political leaders may say they are supporting Ranil standing or sitting besides him at Temple Trees press conferences, they will finally crawl towards Mahinda and Maithri (MY3) at the last moment. There are seems already signals reaching out that both Muslim leaders, especially Rishard Bathiudeen has made a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. Basil Rajapaksa knows much about the corruption of these "deceptive Muslim leaders".
ReplyDeleteHon. PM Mahida Rajapaksa should be ALERT about the "MUNAAFIKK" Muslim politicians, who will FLOCK to him to gain personal benefits trying to say they are the Muslim votes. Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim politicians who stood with "Mahinda pela",., Basil and Gotabaya since they were defeated in January 8th., 2015.
The fact remains NOW, the Muslim voters are acting on their own and do NOT wish to be represented by these "MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS", Insha Allah. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and to support the news government of PM Mahinda Rajapaksa, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - "The Muslim Voice".
Are your people still trusting Mahinda.......
ReplyDeleteDecision has to be Islamic. Whoever got elected by promising UNP-Maithree alliance cannot and should not go against the mandate they have been elected. It is the breach of trust for the people who have voted for them.
ReplyDeleteசகோதரர் சலீம் மொகிதீனுடைய கவனத்திற்கு
ReplyDeleteகட்டுரையாளர் -முபிஸால் அபூபக்கர்- பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர். தயவுசெய்து அவசரப்பட்டு, வார்த்தைகளை எழுத்தில் வடிக்காதீர்கள்.
கருத்துக்களை மதிப்போம்...! மாற்றுக் கருத்துக்களை வரவேற்போம். நம்மிடையேயும் கருத்துக்கள் இருப்பின் அவற்றையும் பின்னூட்டங்களாக்குவோம். ஆனால் கருத்துக்களில் ஒழுக்கத்தை கடைபிடிப்போம்...!!
மேலே பதிவிடப்பட்டுள்ள பதிவை நோக்கும் போது மகிந்தவிற்கு ஆதரவாகத்தான் பதிவிடப்பட்டுள்ளதேன்பது தேளிவாகவுள்ளது அது தவரல்ல.
ReplyDeleteஇருந்த போதும் யார் வந்தாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை அவர்கள் எப்படி வழி நடாத்துவார்கள் என்பதுதான் இங்குள்ள விடயம்.
கடந்த மகிந்த ஆட்சியின் போது அலுத்கம பிரச்சனை உருவானது அதனால் அவர் மாற்றப்பட்டார்
அதனால் உருவானதுதான் My3 தலைமையில் நல்லாட்சி இந்த ஆட்சியில் நடந்தவை முஸ்லிம்கள் அறிவார்கள் மொத்தத்தில் யார் வந்தாலும் இனவாதம்தான் முன்பு எல்லாம் யுத்தத்தை வைத்து அரசியல் நடாத்தினார்கள் இப்பவெல்லாம் இனவாத்த்ததை வைத்துதான் அரசியல் நடாத்துகின்றனர் அப்படி இருக்கும்போதும் இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் எப்படி கையாளலாம் என்று யோசிக்க வேண்டும் எமக்கு வேண்டும் ஜனனாயக நாட்டில் நாம் நிம்மதியாக வாழ வேண்டும் அப்படியானால் நாம் சில் விடயங்கலை முன்வைக்கலாம் (உதாரணம்) பொருளாதாரம், மதஸ்தளங்கள்,உரிமைகள் இப்படியான பலவிடயங்கலை பாதுகாக்க வேண்டும் என்று வெறும் வாய்ப்பேச்சில் இல்லாமல் சட்டரீதியாக அனுகவேண்டும்
மொத்தத்தில் சிறு பான்மையினரின் பாதுகாப்புக்கு சட்டரீதியான முறையில் அனுக வேண்டும்
அதை விடுத்து சலுகைக்காக சோரம் போவதேன்பது இன்னுபம் பிரச்சனை அதிகரிக்கும்.
கருத்துக்களுக்கு மதிப்பளிகப்படல் வேண்டும் ஆனால் தனது கருத்துக்களை முன்னிலைப்படுத்த முஸ்லிம்களுக்கு வழங்கப்படாத ஒன்றை வழங்கப்பட்டதாக அதாவது வில்பத்துவில் காணி வழங்கப்பட்டதாகவும் முதலீட்டு சபையின் திட்டமான ரிதிதென்ன தனியார் பல்கலைக்கழகத்தை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றாக சித்தரிப்பதையும் அலுத்கம கலவரத்தை ஏதோ மகிந்த கட்டுப்படுத்தியதாக்க கூறுவதையும் பார்த்துக் கொண்டு சும்ம இருக்கவும் முடியாது
ReplyDelete