Header Ads



மாகாண சபை மாதாந்தச் சம்பளத்தை, தனது தேவைக்கு எடுக்காத லாபிர் ஹாஜியார்


கடந்த பத்து வருடமாக நான் மாகாண சபை அங்கத்தவராக இருந்த போதும் முழுக்காலத்திலும் எனது மாதாந்தச் சம்பளம் முழுவதையும் மாணவர் புலமைபபரிசில்களுக்கே செலவிட்டுள்ளேன். அதில் ஒரு சதமேனும் எனது தேவைக்கு நான் எடுத்தில்லை என முன்னாள் மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஜெய்னுல் ஆப்தீன் லாபிர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையின் ஜ.தே.க முன்னாள் உறுப்பினர் ஜெயினுலாப்தீன் லாபீர் அவர்களின் 10 வருட  அரசியல் சேவையைப் பாராட்டி நடத்தப்பட்ட ஒரு வைபவத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி- நவயாலத்தென்னையில் உள்ள 'ரிவசைட்' மண்டபத்தில் நடை பெற்ற இவ்வைபவத்தில் தெரிவு செய்யப்பட்ட 57 குடுபம்பங்களுக்கு ஜூக்கி தையல் மெசின்கள் வழங்கப்பட்டன. மேற்படி ஜூகி பயிற்சியை முடித்தவர்களுக்கு  சான்றிதழ்களும்  இவ்வைபவததில் வைத்து வழங்கப்பட்டது. லாபிர் ஹாஜியார் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது-

எமது சமூக நல அமைப்பின் மூலமாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் இன நல்லிணக்கம் மற்றும் குறை வருமானமுடையயோர்களுக்கு சுய தொழிலுக்கான வழிகாட்டல் போன்ற பணிகளை முடிந்த அளவு முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு மத்திய மாகாண சபையும் சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள் ஊடாகவும்  எமக்கு உதவி ஒத்தாசைகள் கிடைக்கின்றன. மத்திய மாகாண கைத்தொழில் மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து இன்றைய நிகழ்வு நடக்கிறது ஆகவே அந்த வகையில் எமது சேவையின்  ஒரு அங்கமாகவே இன்று இந்த பணியும் இடம் பெற்றதுள்ளது.  

இதில் வெறுமனே ஒரு இனத்தைந் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அனைத்து இனங்களையும் சேர்ந்த முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்களுக்கும் சுய தொழிலுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்படும் விசேட நிதி ஒதிக்கீட்டின் கீழ் தனக்கு  கிடைக்கப் பெற்றுள்ள ரூபா 25 இலட்சம் நிதியில் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அது மட்டுமன்றி இது போன்று கண்டி மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களான  ஹத்தரலியத்த , உடுதெனிய போன்ற பிரதேசங்களிலும்  வழங்க நடவடிக்கைகள் எடுத்து வருவத்முள்ளோம். அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினது அழைப்பின்  பேரில் கடந்த 2008ம் ஆண்டு நான் அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டேன். அவ்வாறு இணைந்து  முதல் தேர்தலாக மத்திய மாகாண சபைக்கான தேர்தலைச் சந்தித்து,  ஐ.தே.க சார்பாக போட்டியிட்டு அதில் மகத்தான விருப்புவாக்குகளைப் பெற்று அந்த வருடமே மத்திய மாகாண சபைக்கு தெரிவானேன். அன்று முதல் இது காலவரை  மாகாண சபையினால் எனக்கு வழங்கும் மாதாந்த கொடுப்பணவில் ஒரு சதமேனும் நான் எடுப்பதில்லை. மாறாக அம்முழுப்பணமும் புலமை பரிசில் திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கி வருகின்றேன். இது தான் எனது அரசியல் பயணம்.  எனது சேவைகள் பற்றி நான் இங்கு பெரிதாகக் கூறவிரும்பவில்லை என்றார்.

மத்திய மாகாண விளையாட்டு இளைஞர் விவகார, மகளிர் மற்றும் கிராம அபிவிருத்த கைத்தொழில் அமைச்சர் திலின பண்டார தென்னகோன். கண்டி மாநகர முதல்வர் கேசர சேனநாயக்க, மத்திய மத்திய மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் சானக்க ஐலப் பெரும, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளினது உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என்பன பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

No comments

Powered by Blogger.