Header Ads



எங்கள் தாத்தாவிற்கு, ஒரு யானை இருந்தது...!


-செயினுலாப்தீன் சித்தி ஹுமைஸா- 

இறைவன் அருளிய அருட்கொடைகள் நிறைந்த, இயற்கை கொழிக்கும் அழகிய நாடே இலங்கைத் திரு நாடு. கடல் வளம், நீர் வளம், விவசாய மண் வளம், காடு, மலைகள், பன்மைத்துவ காலநிலை.. போன்ற ஏரளமான வளங்கள் நிறையப்பெற்றது. 1960 இல் சிங்கப்பூர் தலைவர் 'லீ குவான் யூ' இலங்கைக்கு வருகை தந்தபோது இலங்கை சிங்கப்பூரை விட 60 ஆண்டுகள் முன்னோக்கி இருப்பதாகக் கூறியிருந்தார். வாசனைத் திரவியங்கள், தேயிலை, மாணிக்கம், முத்து போன்ற பெறுமதிமிக்க வளங்களால் தனிச்சிறப்பு பெற்று விளங்கிய நாடு. இது இவ்வாறிருக்க,

தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடி என்பது உலகளாவிய ரீதியில் பெரும்பாலான நாடுகளை ஆட்டங்காணச்செய்யும் ஒரு பூதம். இன்னும் சற்று ஆளமாகப் போனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை, அன்றாட உழைப்பில் நாட்களைத் தள்ளும் ஏழை மக்களை கதிகலங்கச்செய்யும் பீதிதான் இந்த பொருளாதார நெருக்கடியும் இதன் விiவுகளும். குறிப்பாக இலங்கையை உற்று நோக்கின் அரசியல் ரீதியாகவும்சரி மக்களின் வாழ்வியல் போராட்டத்திலும்சரி நெருக்கடிக்குள்ளாகியிருப்பது வெளிப்படை. இந் நெருக்கடிகளில் அவசர மாற்றத்தை, மாற்றுத் தீர்வை நோக்கித் தள்ளும் முக்கிய பேசுபொருள்தான் டொலரின் ஏற்றமும் ருபாயின் வீழ்சியும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க எந்தவொரு விடயமாக இருப்பினும் ஒரு வழி முறை அல்லது நாகரிகம் போன்ற எந்தவொரு விடயமாக இருப்பினும் குறித்த காலதத்திற்கே செழித்து நிற்கும், வெற்றியைத்தரும் அல்லது குறித்த காலப்பகுதிக்கே கொடிகட்டிப்பறக்கும் எனலாம். பின்னர் வேறு ஒரு அமைப்பை, அணுகு முறையை அல்லது மாற்றத்தையே வேண்டி நிற்கும். அது கல்விசார் விடயமாயினும், கம்பனிசார் கொள்கையாயினும் அல்லது மக்களின கலாசார, பண்பட்டு, சமூகம்சார், நிர்வாகம் சார்ந்த இப்படியான எந்தவொரு விடயமாயினும்சரி.

மக்களின் வாழ்கைச் செலவில் மேலும் சிக்கல்களை உண்டுபண்ணி ஒரு நாட்டின் அபிவிருத்தியில், பொருளாதார விருத்தியில் பின்னடைவை ஏற்படுத்தும் 'டொலரின் பெறுமதி ஏற்றமும் ரூபாயின் வீழ்சியும்' குறித்து சிந்திக்கவேண்டியதும் மாற்று வழியை, தீர்வை நாடவேண்டிய முக்கிய கட்டத்தில் நிற்கின்றோம். வெறுமனே அரசாங்கங்களை குறைகூறிக்கொண்டு அரசியல் வாதிகள் தங்களை நோக்கிய பந்தை திருப்பி விடுவதனாலோ, அல்லது தங்களது தலையைப் பாதுகாத்தால்போதும் என்ற மனப்பாங்கில் அரசியல் செய்வதனாலோ, அல்லது முழுப்பொறுப்பையும் அரசியல்வாதிகளிடம் விட்டுவிட்டு மக்கள் தங்களது வழமையான போக்கிலேயே போவதனாலேயோ இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு காணவோ அல்லது இச்சிக்கலில் இருந்து மீண்டுகொள்ளவோ முடியாது. இவையெல்லாம் அல்லாமல் இன்னுமொரு இலகு வழியான பிரச்சினையை தள்ளிப்போடுதல் என்பதானது இன்னும் சிக்ல்களை அதிகப்படுத்தவே செய்யும் என்பதை நாம் உறுதியாக மனதில் இருத்திக்கொள்ளவேண்டும்.

இலங்கை இந்நிலையை எதிர்நோக்கியதற்கான காரணங்கள் யாவை, 1960இல் இருந்த இலங்கைக்கு நேர்நததென்ன போன்ற வினாக்களுக்குக்கான பதில்களை ஆராய்ந்தறிவதிலேயே தீர்வு தொடங்குகின்றது.

எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்ததென நாம் இன்னும் பழைய பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்க முடியாது. 60 அண்டுகள் பி;ன்னோக்கியிருந்த சிங்கப்பூர் இப்போது 60 ஆண்டுகள் முன்னோக்கிவிட்டதன் காரணம் என்ன என்பதை ஆராய்வதே முக்கியம். உலக போட்டி நிலையில் இப்போதைய ஆயுதம் எதுவோ அதையே நாமும் ஏந்துகின்ற சந்தர்ப்பத்தில் மட்டுமே வெற்றியடையமுடியும்.

உலக பொருளாதார நிலையின் மாற்றங்களை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். ஆரம்பத்தில் நிலம், மனித உழைப்பு ஊதியம் என்றிருந்தது. பின்னர் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறி தற்போதைய நிலை (வுசநனெ)  சேவைத்துறை அல்லது அறிவு பொருளாதாரம். ஆனால் இலங்கை இன்னும் நிற்பது பெருந்தோட்டத்துறை சார்ந்தே. ஏற்றுமதியில் முயற்சித்தபோதும் அதில் இன்னும் முழுமையடையவில்லை. ஏற்றுமதி என்பதை விட இறக்குமதியையே இன்னும் இலகு வழியாகப்பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கின்றோம். கடலை வைத்துக்கொண்டு மீனை இறக்குமதி செய்தல், விவசாய நாடாக இருந்துகொண்டு அரிசியை இறக்குமதி செய்தல் என்று வெண்ணெய்யை கையில் வைத்துக்கொண்டு நெய்கு அலைதல் என்னும் கதையாய் பல உதாரணங்களைக் கூறலாம். 

இந்நிலைமைகள் அவசரமாக சரி செய்யப்பட்டு, குண்டூசியைக் கூட இறக்குமதி செய்யும் நிலையிலிருந்து படிப்படியாக விலகி உற்பத்தியில் நமக்கென ஒரு இடத்தை நிலை நாட்ட வேண்டும். நம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில் அரசாங்கத்தையே நாடியிராது உற்பத்தி துறையில், புத்தாக்க நடவடிக்கைளில் தங்களது கவனங்களைச்செலுத்தவேண்டும். அரசியல் வாதிகள், இந்தியா செய்த வெண்மை புரட்சி போன்று நாமும் வெண்மைப் புரட்சி, நீலப்புரட்சி, பசுமைப்புரட்சிகள் புரிய வேண்டும். அரசாங்கங்கள் கூட இவ் உடனடி தீர்விற்கான நாட்டத்தை தீவிரமாக செலுத்தி இலங்கையை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தங்களது பேதமைகள் களைந்து ஒன்றிணையவேண்டும்.

No comments

Powered by Blogger.