திரண்டுவந்த ஐ.தே.க. ஆதரவாளர்களிடம், ரணில் ஆற்றிய உரை
மக்களின் ஆணைக்கும் நம்பிக்கைக்கும் துரோகமிழைப்பது வெறுக்கத்தக்க செயல் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் இன்று இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் பாரிய பேரணியில் உரையாற்றும்போதே ரணில்விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் துரதிஸ்டவசமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பாராத தருணத்தில் இந்த ஆணையை மீறினார், பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தி விட்டு தனது கரங்களிற்கு அதிகாரத்தை எடுக்க முயன்றுள்ளார் எனவும் ரணில் வி;க்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் இதனை அனுமதிக்கப்போவதில்லை எனவும் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் மக்கள் எந்த ஜனநாயகத்திற்காக தாங்கள் போராடினார்களோ அந்த ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினரும் பொது எதிரணியினரும் வெள்ளிக்கிழமைக்குள் அனைத்தையும் பூர்த்தி செய்ய விரும்பினர் ஐக்கியதேசிய கட்சி எதனையும் செய்ய முடியாமல் சிறைக்கைதி போல காணப்படும் என அவர்கள் எதிர்பார்த்தனர் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதனை அனுமதிப்பதில்லை என தீர்மானித்தோம், எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் அலரி மாளிகையை ஜனநாயகத்தின் சின்னமாக மாற்றியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கத்தில் மக்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது அவர்கள் என்ன நடக்கின்றது என கேட்கின்றார்கள் ,அதேவேளை மறுபக்கத்தில் மக்களின் அடிப்படை உரிமையான வாக்கின் பலமும் பாராளுமன்றமும் அத்துமீறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க நாங்கள் அவற்றை அத்துமீறுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமை, வாக்களிப்பதற்கான உரிமை,பாராளுமன்றத்தின் இறைமை ஆகியவற்றை பாதுகாத்தவாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக நாங்கள் இணைந்துள்ளோம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தினை உடனடியாக கூட்டவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஏனைய நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரீகத்துக்கு முரணாகக் குறுக்குவழியில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது தவறு. தவறு. தவறு. இதை நாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ReplyDeleteஆனால், இதற்கான அத்தனை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவும் ஜெயம்பதி போன்ற ஜனநாயக சக்திகளுமே.
ராஜபக்ஸக்களை விலக்கினால் போதும் என்ற அளவில்தான் இவர்களுடைய சிந்தனை குறுகியிருந்ததே தவிர, நாட்டின் எதிர்காலம் பற்றியோ எண்ணிக்கையில் சிறுபான்மையினராகிய ஏனைய தேசிய இனங்களின் பிரச்சினைகள், உரிமைகள் பற்றியோ இவர்கள் அக்கறைப்பட்டதில்லை.
அரசியலமைப்பில் ஒற்றை ஆட்சியை வலிமைப்படுத்துவதற்காக ஜெயம்பதி உள்ளிட்டோர் அளித்த வியாக்கியானங்கள் கண்ணியமற்றவை. மற்றவர்களை முட்டாளாக்குவன. அருவருப்பூட்டுவன.
19 திருத்தத்தின் மூலம் தன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்று நினைத்துக் கொண்டு அந்தத் திருத்தத்தைச் செய்த பிறகு ஏனைய திருத்தங்கள், மாற்றங்கள், புதியனவற்றை அரசியலமைப்பில் உருவாக்குவதைப்பற்றி ரணில் தரப்பு அக்கறைப்படவில்லை. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதைப்பற்றிச் சிந்திக்கவேயில்லை. காலம் கடத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்தது. குறைந்தது காணாமலாக்கப்பட்டோர், சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களைப்பற்றிய சிறிய அளவிலான கரிசனையைக் கூடக் கொண்டதில்லை.
ஆட்சிமாற்றத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவளித்த தரப்பையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. இப்போது நெருக்கடி வந்தவுடன் எல்லோரும் ஓடி வாருங்கள் என்று கூக்குரல் இடுகிறார்கள். இப்படியான நிலை வரும் என்று பலருக்கும் எப்போதோ தெரியும்.
ஆனால், அதிகாரத்திலிருந்தோருக்கும் அதை அண்டிப் பிழைத்தோருக்கும்தான் தெரியாமல் போய் விட்டது.