மக்களை வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவிக்க முடியாது
ஆட்சியாளர்கள் பொது மக்களின் பணத்தை வீண் விரயம் செய்துக்கொண்டு, பொதுமக்களின் வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூற ஆட்சியாளர்களுக்கு எந்த தார்மீக உரிமையுமில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் செலவிட்டு கார் ஒன்றை இறக்குமதி செய்தனர்.
எந்தளவு தூரம் அந்த கார் செல்லும். அலரி மாளிகையில் இருந்து 25 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் நாடாளுமன்றத்திற்கு சில நேரங்களில் ஹெலிக்கொப்டரில் வருவார்.
பிரதமரிடம் இருக்கும் காரை போல் பெறுமதியான இரண்டு கார்கள் ஜனாதிபதிக்கு உள்ளன. அவற்றின் பெறுமதி 6 ஆயிரம் லட்சம் ரூபாய். அமைச்சர்கள் அனைவருக்கும் புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அனைத்து வாகனங்களும் 4 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியானவை.
ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவருடன் சுமார் 63 பேருக்கும் மேற்பட்டவர்கள் செல்கின்றனர். இதனால், மக்களை வயிற்றில் துணியை கட்டிக்கொள்ளுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகபோகம் அனுபவிக்க முடியாது.
ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இதுவரை அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment