Header Ads



கவலை தெரிவிக்கிறது சவுதி, ஜமாலை தமது நாட்டிற்கு கொண்டுசெல்ல முயற்சித்ததாகவும் கூறுகிறது

(வீரகேசரி)

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில்  பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொல்லப்பட்டதை சவுதி அரேபியா உறுதி செய்துள்ளது.

துருக்கியில் உள்ள தூதரகத்தில் சவுதி அரேபியாவை சேர்ந்த அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலின் போது பத்திரிகையாளர் கொல்லபட்டார் எனசவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர் ஜமால் கசோஜிக்கு என்ன நடந்தது என தெரியாது என கடந்த இரண்டு வாரங்களாக தெரிவித்து வந்த சவுதி அரேபியா  தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் சென்ற பத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல் இழுபறி நிலையின் போது அவர் கொல்லப்பட்டார் என சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளருக்கும் சவுதி அதிகாரிகளிற்கும் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியது என சவுதிஅரேபியாவி;ன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற துன்பகரமான விடயங்களிற்காக  ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்வதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

துருக்கி வழங்கிய தகவலின் அடிப்படையில் பல அதிகாரிகள் விசாரணை செய்யப்பட்டனர் அவர்கள் வழங்கிய தகவலின் படி பத்திரிகையாளரை சவுதி அரேபியாவிற்கு கொண்டுவரும் நோக்கிலேயே சவுதி அரேபியா அதிகாரிகள் துருக்கிக்கு சென்றமை தெரியவந்துள்ளது எனவும் சவுதி அரேபிய ஊடகம்  தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளரின் மரணத்திற்கு காரணமானவர்கள் அதனை மூடிமறைத்தனர் எனவும் சவுதிஅரேபிய ஊடகம் தெரிவித்துள்ளது.

5 comments:

  1. Today; mighty is always right ..
    So; Saudi got money ...they can buy any one.

    ReplyDelete
  2. அது இது சொல்லி எங்களுக்கு சரிவராது இவரை கொலையை செய்ய அனுமதி/கட்டளை கொடுத்த இளவரசரின் தலையை எல்லோருக்கும் முன்னாள் துண்டித்து இஸ்லாமிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் .

    ReplyDelete
  3. Next question that, Where is the body?
    Where is our Yahuthi Arabian's Slaves? No sound at all

    ReplyDelete
  4. சவுதி மன்னனைவிட மோசமாக நடந்நு துருக்கி சொல்வதெல்லாம் பொய் ஜமால் கார்சூகி உயிருடன் இருக்கிறார் என்று சல்மானுக்கும் முஹம்மதுக்கும் வாலி தூக்கின சல்லாபிகள் எங்கே

    ReplyDelete
  5. Where is Rasheed to defend Saudi Government. For some in Sri Lanka, critisizing Saudi is like critising Islam.

    ReplyDelete

Powered by Blogger.