தகவல் வழங்கினால், சன்மானம் வழங்கப்படும்
இலங்கை மக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தலொன்றை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் நாட்டு மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரியுமாயின் தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கலாம் என அரச ஊடகமொன்று இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மிக முக்கியமான தகல்களை வழங்குவோருக்கு சன்மானம் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரியுமாயின் அறிவிக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0113-024-820, 0113-024-840, 0113-024-850 ஆகும். பெக்ஸ் இலக்கங்கள் 0112-430-912, 0112-472-757.
அத்துடன் sand@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment