Header Ads



கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிராக, அவசரமாக நீதிமன்றத்தை நாடுங்கள் - பௌத்த தேரர் அறிவுரை


சூழலுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் தடையுத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டுமென, கற்பிட்டி கண்டக்குளி விகாராதிபதி வண. தியசேன ஹிமி தெரிவித்தார்.

கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கற்பிட்டியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற விழிப்புணர்வு ௯ட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு ௯றினார்.

கற்பிட்டி ஒன்றிணைக்கப்பட்ட சிவில் சமூகம் ஏற்பாடு செய்த இந்த விழிப்புணர்வு பொதுக் கூட்டத்தில், க்ளீன் புத்தளம் அமைப்பினர், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்தும் பேசிய விகாராதிபதி மேலும் ௯றுகையில்,

“கொழும்பிலும், பிற மாவட்டங்களிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை, புத்தளம், சேராக்குளிப் பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட பாரிய குழிகளில் கொட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

“இது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. இதனால் எமக்கு மாத்திரமின்றி, எமது எதிர்கால சந்ததியினரும் பாதிப்புகளை எதிர்நோக்கவுள்ளனர். இந்தத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால், முழுமையான பிறகு எதனையும் செய்ய முடியாது.

“எனவே, இந்த திட்டத்துக்கு எதிராக புத்தளத்தில் மேற்கொள்ளப்படும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு தாங்கள் ஆதரவு வழங்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, அதனை ஏற்றுக்கொண்டு, எங்களையும், எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்கும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டேன்.

“சமயத் தலைவர் என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் இன, மத, மொழி பிரதேசம் என எல்லாவற்றையும் களைந்து, மக்களுக்ப்கு பாதிப்பு ஏற்படும் போது அதனைப் பார்த்துக்கொண்டிருக்காது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தேயாக வேண்டும்.

“அதற்காகவே நாம் இனங்களுக்கு அப்பால், சமயத் தலைவர்ளும், மக்களும் ஒற்றுமையாக இருந்து கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு வரும் குப்பைகளை மீண்டும் கொழும்புக்கே திருப்பி அனுப்பும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

 “எனவே, இந்த மக்கள் போராட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தும் குழுவினரை ஒவ்வொருவராக ஏதாவது குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து, இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக முயற்சிப்பார்கள்.

“பாதையில் வாகனங்களில் பயணிக்கும் போது தடைசெய்யப்பட்ட பொருளை வைத்து சிறைப்படுத்தவும் பார்ப்பார்கள்.

“என்ன எதிர்ப்புகள் வந்தாலும், இந்தப் போராட்டத்தில் இருந்து ஓர் அடியேனும் பின்னோக்கிச் செல்லக்௯டாது” என்றார்.

ரஸீன் ரஸ்மின் 

No comments

Powered by Blogger.