எதிர்பார்க்கப்பட்டதைவிட பெரும், எண்ணிக்கையிலானவர்கள் ஐ.தே.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த, சிறிலங்கா அதிபருக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டக் கோரியும், கொழும்பில் ஐதேக இன்று பாரிய பேரணியை நடத்திது.
கொழும்பு லிபேர்ட்டி சுற்றுவட்டத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்காக ஐதேக ஆதரவாளர்களும், அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.
ஐதேக மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, அரசாங்க கட்டடங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை தடைவிதித்தும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றத் தடை உத்தரவை சிறிலங்கா காவல்துறை பெற்றிருந்தது.
அத்துடன், சிறிலங்கா காவல்துறையினர் 2000 பேரும், சிறப்பு அதிரடிப்படையின் 10 அணிகளும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில், நீர்ப்பீரங்கி வாகனங்களும், ஆயத்தமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும், எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் தொகையான ஐதேக ஆதரவாளர்கள் இந்தப் பேரணியில் திரண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பேரணியினால், அமெரிக்க தூதரகம், மற்றும் அமெரிக்க மையம் என்பன மூடப்பட்டுள்ளன.
Post a Comment