திஹாரியில் நல்லாட்சிக்கான தேசிய, முன்னணியின் தேசிய செயற்குழுக்கூட்டம்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய செயற்குழுக்கூட்டம் திஹாரியில் நடைபெற்றது. இதில் NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உற்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் United Professionals Movement இயக்கம் குறித்த ஒரு அறிமுகமும் UPM இயக்க உறுப்பினர்களுடனான ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அத்தனகல தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர், மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ. சந்திரசோம சரணலால் அவர்களுடன் சினேகபூர்வமான சந்திப்பொன்றும் இடம் பெற்றது. இந்த சந்திப்பினை NFGG யின் அத்தனகல பி.ச.உறுப்பினர் அப்துல் ரஹீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
அடுத்ததாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தத்தமது சபைகளில் எதிர்நோக்கும் சவால்கள், மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் பற்றி தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல்களில் NFGG அடுத்த கட்ட செயற்பாடுகள் முன்னெடுப்புகள் குறித்தும், கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு தேசிய அரசியலில் எதிர்பாராத பலவேறு மாற்றங்கள் நிகழவுள்ள சூழலில் கட்சியின் முன்னெடுப்புகள் குறித்தும் ஆரம்ப கட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
கட்சிக்கான நிதி திரட்டல், புதிய அங்கத்தவர்களை சேர்ப்பது பற்றியும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Post a Comment