மகிந்தவுடன் எப்படி நண்பராகினீர்கள்..? என மைத்திரிபாலவிடம் கேளுங்கள்
நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏன் பயப்படுகின்றீர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கை அரசியலில் குழப்ப நிலையில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வரப் பாடுபட்டவர்களே தற்போது இங்கு இருக்கிறார்கள்.
அவரை ஜனாதிபதியாக கொண்டு வர நாம் உயிரை கூட பணயம் வைத்தோம். இருப்பினும் எமக்கு ஒன்றும் புதிதாக கிடைக்கவில்லை.
அதற்காக நாம் எதையும் எதிர்பார்க்கவில்லை. மாற்றமொன்றை மாத்திமே எதிர்பார்த்தோம். அதற்காகவே தியாகங்களை செய்தோம்.
ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வர மிகவும் பாடுபட்டார்.
எனவே ஜனாதிபதிக்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். எடுத்துள்ள நற்பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
மகிந்தவுடன் எப்படி நண்பராகினீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவுமாறும் ஊடகவியலாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment