ஞானசாரரை மன்னிக்குமறு அவரது தாய், ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
-ARA.Fareel-
அரசாங்கத்தில் சட்டம் ஒருதலை பட்சமாகவே செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு வழங்குவதில் அரசாங்கம் பாரபட்சம் பார்க்கின்றது என தெரிவித்த ராவணபலய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், ஞானசாரரது விடுதலை தொடர்பில் கடந்த காலங்களில் நாங்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அவற்றில் எவ்விதமான தீர்வும் இதுவரையில் எட்டப்படவில்லை.
ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஞானசார தேரர் அன்று நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் காணப்படவில்லை. இராணுவ புலனாய்வு அதிகாரிகளை சிறை வைப்பதற்கு எதிராகவே அவர் கருத்து தெரிவித்தார்.
எனினும் அவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்ததன் பின்னர் தான் தெரிவித்த கருத்துக்களில் ஏதேனும் தவறுகள் காணப்பட்டால் மன்னிக்குமாறும் ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருப்பினும் அவருக்கு கடூழிய தண்டனை பௌத்தமத கோட்பாட்டுக்கு முரணாக விதிக்கப்பட்டது. இவரது கருத்துக்கள் முரணாக காணப்பட்டாலும் பௌத்த மதத்தை பாதுகாப்பதே அவரது நோக்கமாக காணப்பட்டது. எனவே தான் பொதுபலசேனா அமைப்பு அவருடைய விடுதலையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
தொடர்ந்து நாட்டில் இனவாதம் பேசி வடக்கினையும், தெற்கினையும் பிரிக்கும் விதமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்படும் தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிராக இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை, மறுபுறம் மீண்டும் விடுதலை புலிகளின் இயக்கம் தோற்றம் பெற வேண்டும் அதுவே எமது நோக்கம் என்று பகிரங்கமாக அறிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரனுக்கு பிணையில் செல்லக்கூடிய அளவிற்கு சட்டம் செயற்படுமாயின் ஏன் ஞானசார தேரரின் விவகாரத்தில் இவ்வளவு இறுக்கமாக காணப்படுகின்றது. இதன் பின்னணியை அறிய முடியாதிருக்கிறது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், அரசாங்க அமைச்சர்களும் குரல் கொடுப்பதை போன்று ஏன் பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் ஞானசார தேரருக்கு ஆதரவாக செயற்பட முன்வர மறுக்கின்றனர். இவரது கைது அரசாங்கத்தின் நெடுநாள் விருப்பமாகவே காணப்பட்டுள்ளது என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.
ஞானசார தேரரின் விடுதலை குறித்து அவரது தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இவ்விடயத்தில் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தினை செயற்படுத்த வேண்டும்.
இவரது தண்டனை தொடர்பில் மீள் பரிசீலனை செய்து பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இவ்விடயத்தில் அவருக்கும் பல தடைகள் ஏற்படும் ஆகவே அவர் தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-Vidivelli
இந்த தரித்திரியத்தை விடுதலை செய்வதட்கு பதிலாக வடக்கில் ஒரு குடும்பம் அம்மா இறந்து தந்தை சிறையில் வாழுகின்றார் அவரை உடனடியாக விடுதலை செய்தால் அந்த அப்பாவி பிள்ளைகளுக்கும் சமூகத்துக்கும் ஒரு நன்மை சரி கிடைக்கும்.
ReplyDeleteஇப்படி ஒரு இனவாத பேயை பெற்றதற்கு இந்த தாய் வெட்கப்பட வேண்டும்
ReplyDelete