எதிர்வரும் வெள்ளிக்கிழமை, எமது பலத்தை பார்க்கமுடியும் - சம்பிக்க
தலைமைத்துவ சபையின் ஊடாக தீர்மானங்களை எடுக்க விரிவான முன்னணி கீழ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்தாபிக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அரசியலமைப்பு விரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக முன்னாள் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளனர்.
அலரி மாளிகையில் இன்று -30- மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
விரிவான கூட்டணியை ஏற்படுத்தும் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். அரசியலமைப்பு விரோத செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைவரது கருத்துக்களை கூட்டாக செயற்படுத்தும் விரிவான மற்றும் ஜனநாயக ரீதியான புதிய அரசாங்கத்திற்காக நாங்கள் இந்த அழைப்பை விடுக்கின்றோம்.
இது வெற்று வானத்தில் விடுக்கும் கோரிக்கையல்ல. நாங்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களிடம் இருந்த சில தவறுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த தவறுகளை திருத்திக்கொண்டு நாட்டை முன்னெடுத்துச் செல்ல இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
அடுத்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூட்டப்படும். அப்போது ஆட்சியமைக்க போகும் அடுத்த அரசாங்கத்தின் பலம் எப்படியானது என்பதை பார்க்க முடியும் எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment