"அரசாங்கம் கூறும் கதைகள் அனைத்துமே, கனவுகள் மட்டுமேயாகும்"
ஜனாதிபதி - பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு மக்கள் மீது பொருளாதார சுமையினை சுமத்துவதும், மக்களை கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூறுவதும் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அரசாங்கம் கூறும் கதைகள் அனைத்துமே கனவுகள் மட்டுமேயாகும். அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கொள்கை இந்த நாட்டினை அழிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வந்த புதிய தொழிநுட்ப தொழிற்சாலை ஒன்றை கூற முடியுமா உங்களால்? இருந்த அணைத்து தொழிற்சாலைகளையும் அழித்துவிட்டீர்கள். உங்கள் எவராலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
மக்களிடம் இருந்து முழுமையாக பரித்துக்கொண்டு மிகக் சிறிய சலுகைகளையே மக்களுக்கு கொடுக்கிரீர்கள். உங்களின் கதைகள் அனைத்துமே கனவுகள் மட்டுமேயாகும். உங்களின் பொருளாதாரம் இந்த நாட்டினை அழிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவர் கூறுவது உண்மையான கதை. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் கதையின் பின்னால் இருப்பது பொருளாதாரத்தையும் நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களையும் விற்று சொந்த பக்கட்டுகளில் கோடான கோடி பணத்தை மறைத்து வைப்பதும்தான் தற்போது பொருளாதார முன்னேற்ற நடவடிக்ைககள் என்ற பெயரில் நடைபெறுகிறது. அதேநேரம் அதற்கு ஈடாக அல்லது மாற்றீடாக நாட்டின் குறிப்பாக நாட்டு மக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட ஆக்கபூர்வமான திட்டங்கள் எதையும் ஜே.வீ.பி. முன்வைத்திருக்கின்றதா? எனக் கேள்விகேட்டால் அதற்கு பதில் இருக்கின்றதா? இந்தக் கேள்வியை அதன் தலைவர் அனுரா குமார திஸாநாயக்கா அவர்களிடம் கேட்கின்றேன்.
ReplyDelete