அநுராதபுரத்தில் விநோத வழக்கு - நீதிபதி என்ன செய்யப்போகிறார்..?
19 மாங்காய்களை அயல் வீட்டில் திருடிய வயோதிப பெண்ணொருவர் அனுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ,வழக்கை எதிர்வரும் 30ம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் , தனது வீட்டுத்தோட்டத்தில் 19 மாங்காய்களை திருடினார் என பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் அனுராதபுரம் காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த சிறிய சம்பவத்தை பெரிது படுத்தாமல் தாங்களே தீர்த்துக்கொள்ளுமாறு குறித்த பெண்ணிடம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் , அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பெண் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் , 70 வயதுடைய குறித்த வயோதிப பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால் எதிர்வரும் 30ம் திகதி அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
She might tell the judge she did not have any money to buy food..she was so hungry so; she did not have any other means to eat so; I did it ..she must pleade guilty but she must back up her claim that she was truly hungry..
ReplyDeleteIf it is case; there are some provision in western common law..
Islamic law is clear on that;