துமிந்தவிற்கு மரண தண்டனை, அர்ஜூனவிற்கு பிணையா...? ஆவேசத்தில் விமல்
"துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு எந்தவித கட்டளைகளையும் பிறப்பிக்காத துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனையும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு கட்டளையிட்ட அர்ஜுன ரணதுங்கவிற்கு பிணையில் விடுதலை" இதுவா காவல் துறையினரின் நியதி என விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளத்துறை அமைச்சிற்குள் பிரவேசிக்கும் போது அங்கு அவருக்கு எதிராக ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஏற்பட்ட பதற்றத்தினை தொடர்ந்து அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஒரு கொலையை செய்வதற்கு கட்டளையிட்ட அமைச்சர், ஒருவர் சில மணித்தியாலங்கள் மாத்திரம் காவல் துறையினர் வசம் இருந்து பிணையில் விடுதலை செய்யப்படுகின்றார் என்றால் காவல் துறையினரின் ஒழுங்கீனமற்ற நடவடிக்கையையே எடுத்துணர்த்துவதாக விமல் வீரவங்ச தெரிவித்தார்.
இதற்கு காவல் துறையினரே பொறுப்பு கூறவேண்டும் என தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேரடி செவ்வியில் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்துக்கு முரணாக, பின்கதவால் ஆட்சிக்கு நுழைந்து,அமைச்சு பதவி பெற்று இன்னமும் பதவியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளமுன்பு சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு பழக்கப்பட்ட இந்த பாலவன்ஸ சொல்வதைப்பாருங்கள். சட்டத்தைக் காலால் மிதிக்கின்றான். சட்டம் ஒருவனைக்குற்றவாளியாக தீர்ப்பளித்தபின் அதுபற்றி சட்டத்துக்கு உற்பட்ட யாரும் அதனை விமர்சிக்கக்கூடாது என்பது தான் நாட்டின் சட்டம். இவன் எவ்வாறு விமர்சிக்கின்றார். குற்றவாளியையும் சந்தேகத்துக்கு இடமான ஒருவரையும் ஒரே தராசியில் இட்டு சட்டத்தைப் பாதுகாப்பவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிக்கின்றான். இந்த கலாசாரம் தான் அவனையும் அவனது ஆட்களையும் வளர்த்தது.மீண்டும் அந்த யுகத்தை நோக்கி நகரவும் மக்களை நகர்த்தவும் தொடங்கிவிட்டான்.
ReplyDeleteஅட லூசு வன்ச...
ReplyDelete