Header Ads



மைத்திரி, மகிந்தவை விரட்டியடிப்போம் - இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் : ராஜித

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டத் தவறினால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்த வெளிநாட்டு ராஜதந்திரிகள் எச்சரித்துள்ளனர் என டொக்டர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதியையும், பிரதமரையும் விரட்டியடிப்போம். நாளைய நாளில் மக்களின் ஆட்சி ஒன்றை உருவாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.