ஐ.தே.க. திருடர்களை பாதுகாத்தால், பாராளுமன்ற பதவியை விட்டுச்செல்வேன் - Dr காவிந்த ஜயவர்த்தன
ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் பாராளுமன்ற பதவியை விட்டுச்செல்வேன் என ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.கம்பஹா பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திபில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
ஊழல் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் 2015 ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.
என்றாலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தற்போதும் இந்த அரசாங்கம் சில திருடர்களை பாதுகாத்து வருகின்றது எங்களுக்கு தெளிவாகியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் எங்களது கெளரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் எனது பாராளுமன்ற பதவியை திருப்பிக்கொடுக்கவோ அல்லது இராஜினாமா செய்யவோ பின்வாங்கமாட்டோம். திருடர்களை பாதுகாக்க ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Mr.Minister already your leader did on central bank issue then why are you waiting??
ReplyDelete