"அத்துமீறி அனுமதியின்றி கட்டப்பட்ட வணக்கஸ்தலத்தை, பாதுகாக்க வேண்டும் என்பது முறையான செயல் அல்ல"
கல்முனை பிரதேச சபை வளவில் சட்டப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்ட வணக்கஸ்தலம் சம்பந்தமாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையானது இது பற்றிய சரியான தெளிவின்றியே அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
இறை அச்சமுள்ளார் பிற மதத்தவரின் வழிபாட்டுத்தலங்களை மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் மேற்படி வணக்கஸ்தலத்துக்கெதிராக நீதிமன்றத்தை நாடியது தவறு என்பது போன்றும் அறிக்கை விட்டுள்ளார்.
திரு. வி. ஆனந்த சங்கரி அவர்கள் நாம் பெரிதும் மதிக்கும் தமிழ் தலைவர். இனவாதம் கொஞ்சமும் இல்லாத தமிழ் பெருமகன். அப்படியிருந்தும் கல்முனையில் என்ன நடந்தது நடக்கிறது என்பதை சரியாக தெரியாமல் ஒரு பக்க தரப்பின் தகவலை மட்டும் வைத்து அறிக்கையிட்டமை தவறாகும்.
கல்முனையில் தமிழர்களும் முஸ்லிம்களும் எந்தப்பிரச்சினையும் இன்றி சகோதரர்களாகவே வாழ்கிறார்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரசும் தமிழ் கூட்டமைப்பும் தமது அரசியல் நலனுக்காக இம்மக்கள் மத்தியில் இனவாதத்தினை ஊக்குவித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
கல்முனையில் ஒரேயொரு பிரதேச செயலகம் அதுவும் தமிழ் மொழி பிரதேச செயலகம் இயங்கி வந்தது. யுத்த காலத்தில் புலிகளின் ஆயுத பலத்தால் கல்முனை உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம்கள் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மேற்படி உப செயலகம் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றும் தமிழ் பிரிவு என்றும் அழைக்கப்பட்டது சட்டத்துக்கு முரணானது. எந்தவொரு பிரதேச செயலகமும் இனத்தின் பெயரால் அழைக்க முடியாது என்று தெரிந்தும் இனவாதத்தை உருவாக்கி தமிழ் மக்களை உசுப்பேற்றுவதற்காகவே தமிழ் இனவாத அரசியல்வாதிகளாலும் அவர்களின் அதிகாரத்துக்கு பயந்த கல்விமான்களாலும் பாவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்முனையில் முஸ்லிம்களின் வாழும் இடங்களையும் அவர்களின் வியாபாரஸ்தலங்களையும் உள்ளடக்கி புதியதொரு தனியான பிரதேச சபையை உருவாக்க கள்ளத்தனமாக முயற்சிகள் எடுக்கப்பட்டன. கல்முனை முஸ்லிம்களின் பிரதிநிதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது இதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இது பற்றி அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது எதிர்ப்பை காட்டியதால் முஸ்லிம்களின் நிலபுலன்களை கபளீகரம் செய்யும் முயற்சி கைவிடப்பட்டது.
அதன் பின் பிரதேச செயலக வளவில் கோவில் கட்டுமான பணிகள் அனுமதியின்றி ஆரம்பமான போது அதனை நிறுத்தும் படி அ. இ. மக்கள் காங்கிரசின் ஆதரவாளர் மூலம் அரச அதிபரினால் கூறப்பட்டு இடை நிறுத்தப்பட்டது. பின்னர் இரவோடிரவாக கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் கல்முனை மேயர் சட்டபூர்வமற்ற இந்த வணக்கஸ்தலத்தை உடைக்க வேண்டுமென வழக்கு தாக்கல் செய்துள்ளார். இத்தனைக்கும் மேற்படி வணக்கஸ்தலம் கட்டப்பட ஆரம்பிக்கப்பட்ட போதே மேயரினால் தடை உத்தரவு பெற்றிருக்க முடியும். அதனை செய்யாமல் இருந்து விட்டு எல்லாம் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இறுதியிலாவது அவர் சட்டத்தை நாடியது சரியான செயலாக இருப்பினும் இது விடயத்தில் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் திட்டமிட்டு கல்முனையில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்த முணைகிறார்களா என்ற சந்தேகமும் உலமா கட்சிக்கு உண்டு.
இந்த உண்மைகளை புரியாமல் அத்துமீறி அனுமதியின்றி கட்டப்பட்ட வணக்கஸ்தலத்தை மற்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என மூத்த அரசியல்வாதியான ஆனந்த சங்கரி சொல்வது முறையான செயல் அல்ல.
கல்முனை பிரதேச செயலகத்துள் பணி புரியும் இந்துக்களுக்கு கோவில் தேவையாயின் அனுமதி பெற்று கோவில் கட்டலாம். அதே போல் அங்கு பணிபுரியும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தேவைப்பட்டால் பௌத்தர்களுக்கும் வணக்கஸ்தலங்களை அதே அனுமதியுடன் கட்டிக்கொள்ள முடியும்.
ஆனால் அனுமதியற்ற அல்லது எந்தத்தேவையும் இல்லாமல் சிங்கள இனவாதிகள் வடக்கிலும் கிழக்கிலும் சிலைகளை வைப்பது போன்று இனவாத தமிழர்களும் சிலையை வைத்து விட்டு அதனை மற்றவர்கள் பாதுகாக்க வேண்டும் என சொல்வது திரு. ஆனந்த சங்கரியின் அரசியலில் மிகப்பெரும் சறுக்கலாகும்.
வடக்கில் சிங்களவர்கள் விகாரை அமைப்பது ஆக்கிரமிப்பு. இவர்கள் கட்டும் சட்ட விரோத கட்டிடங்கள் மட்டும் ஆக்கிமிப்பில்லையா? நீதிமன்றத்தின் உதவியோடு அந்த சட்டவிரோத கட்டிடம் இடித்து நொறுக்க படவேண்டும்
ReplyDeleteதென் இலங்கையில் கடந்த காலங்களில் பள்ளிவாசல்களை உடைத்த பிக்குகள் கூறியவார்த்தைகளையே முஸ்லிம்களும் கூறலாமா? இது ஒரு ஈகோ பிரச்சினைமட்டும்தான். அறிவு பூர்வமானதல்ல. இப்படி பார்த்தால் நாடு முழுக்க பல விகாரைகள் பல கோவில்கள்பல பள்ளிவாசல்கள் பல கிறிஸ்தவ வணக்கத்தலங்கள் உடைத்தெறியபடவேண்டியிருக்குமே.
ReplyDelete.
கல்முனை இழக்கின் வெடிகுண்டுபோல இருக்கு. அதானால் பத்திரிகையாளர்களும் எல்லா இனங்களையும் சேர்ந்த தலைவர்களும்கல்முனை விவகாரங்களைக் கையாளு
ம்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உல்மா கட்சி தலைவர் கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களை தூண்டிவிட்டு, கலவர்த்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்.
ReplyDeleteகல்முனையில் கை வைச்சால் தமக்கு தாமே முஸ்லிம்கள் சவக்குழி தோண்டுவதட்கு ஈடாகும்.
ReplyDeleteAnushath நாங்களும் கல்முனை தான் வேண்டுமென்றால் நாங்களும் தயார்.
ReplyDelete